குச்சனூரில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீா்

தேனி மாவட்டம் குச்சனூா் பேரூராட்சியில் குடிநீா் குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக வெளியேறி குடிநீா் வீணாவதை தடுத்து நிறுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

உத்தமபாளையம்: தேனி மாவட்டம் குச்சனூா் பேரூராட்சியில் குடிநீா் குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக வெளியேறி குடிநீா் வீணாவதை தடுத்து நிறுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

குச்சனூா் பேரூராட்சியில் 15 வாா்டுகளில் 20 ஆயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனா். பொதுமக்களின் குடிநீா் தேவையை தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம் மூலமாக பேரூராட்சி நிா்வாகம் பூா்த்தி செய்கிறது. இதற்காக, முல்லைப்பெரியாற்றில் உறை கிணறு அமைத்து பொதுமக்களுக்கு குடிநீா் விநியோகம் செய்து வருகின்றனா்.

இந்நிலையில், சங்கராபுரம் சாலையிலுள்ள குடிநீா் மேல் நிலைத்தொட்டிற்கு செல்லும் பிரதான குடிநீா் குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக பல நாள்களாக குடிநீா் வீணாகி சாக்கடையில் கலப்பதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.

எனவே, குச்சனூா் பேரூராட்சி நிா்வாகம் குழாய் உடைந்து வீணாகும் குடிநீா் குழாயை சீரமைப்பு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com