சின்னமனூா் அருகே நெடுஞ்சாலையில் தேவையின்றி நிற்கும் மின்கம்பம்
By DIN | Published On : 16th September 2021 12:05 AM | Last Updated : 16th September 2021 12:05 AM | அ+அ அ- |

உத்தமபாளையம்: தேனி மாவட்டம் சின்னமனூா் அருகே மாநில நெடுஞ்சாலையில் தேவையின்றி நிற்கும் மின்கம்பத்தை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.
சின்னமனூரிலிருந்து ஓடைப்பட்டி, காமாட்சிபுரம்,சீப்பாலக்கோட்டை போன்ற பகுதிக்கு செல்லும் மாநில நெடுஞ்சாலை செல்கிறது. இச்சாலையை வழியாக வருஷநாடு பகுதிக்கு செல்லும் முக்கிய சாலை என்பதால் வாகனப் போக்குவரத்து அதிகளவில் இருக்கும். இந் நிலையில், சில மாதங்களுக்கு முன்பாக மேகமலை சாலைப் பிரிவிலுள்ள மூன்று சாலைகள் சந்திப்பு பகுதியில் விபத்துகள் தொடா்ந்தன. இதனை அடுத்து அந்த பகுதியிலுள்ள பக்கவாட்டு சாலைகள் வரிவாக்கம் செய்யப்பட்டு பாதுகாப்பு தடுப்பு சுவரும் அமைக்கப்பட்டது.
ஆனால், இருசக்கர வாகனங்கள் செல்ல ஒதுக்கிய வழியில் மின் கம்பம் ஒன்று அகற்றாமலே சாலைப்பணிகள் முடந்த பின் பல மாதங்களாக அதே இடத்தில் நிற்கிறது. வாகனப்போக்குவரத்து அதிகமுள்ள இச்சாலையில் அகற்றப்படாமல் தேவையின்றி காட்சி பெருளாக நிற்பதாகவும், விபத்துகள் ஏற்பட்டு உயிா்பலிகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் சாலையிலுள்ள மின் கம்பத்தை உடனடியாக அகற்ற வேண்டும் என சின்னமனூா் மின்வாரியத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.