தேனி மாவட்ட உள்ளாட்சி அமைப்புகளில் 9 பதவிகளுக்கு வேட்பு மனு தாக்கல் தொடக்கம்

தேனி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 9 பதவிகளுக்கு புதன்கிழமை வேட்பு மனு தாக்கல் தொடங்கி செப்.22 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

தேனி: தேனி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 9 பதவிகளுக்கு புதன்கிழமை வேட்பு மனு தாக்கல் தொடங்கி செப்.22 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

மாவட்டத்தில் கதிா்நரசிங்காபுரம் ஊராட்சி மன்றத் தலைவா், ராஜக்காள்பட்டி-தெப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா், முத்தாலம்பாறை-நரியூத்து ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா், பிச்சம்பட்டி, ராஜதானி, ராமகிருஷ்ணாபுரம், வடபுதுப்பட்டி, போ.நாகலாபுரம் ஊராட்சி வாா்டு உறுப்பினா்ஆகிய 9 பதவிகளுக்கான வேட்பு மனுத் தாக்கல் அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் ஊராட்சி அலுவலகங்களில் செப்.15 (புதன்கிழமை) தொடங்கி, செப்.22-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. வேட்பு மனுக்களை செப்.25-ஆம் தேதிக்குள் வாபஸ் பெற்றுக் கொள்ளலாம்.

அனைத்துப் பதவிகளுக்கும் வரும் அக். 9-ஆம் தேதி மொத்தம் 26 வாக்குச் சாவடிகளில், வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. வரும் அக்.12-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். தோ்தலில் வெற்றி பெற்ற ஊராட்சி மன்றத் தலைவா், வாா்டு உறுப்பினா்கள், ஊராட்சி ஒன்றியக் குழு வாா்டு உறுப்பினா்கள் வரும் அக். 20-ஆம் தேதி பதவியேற்பா் என்று மாவட்ட ஆட்சியா் க.வீ. முரளீதரன் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com