சுருளியாறு மின்வாரிய குடியிருப்புப் பகுதியில் யானைகள் நடமாட்டம்

தேனி மாவட்டம் சுருளியாறு மின் உற்பத்தி நிலைய குடியிருப்புப் பகுதியில் புதன்கிழமை இரவு யானைகள் கூட்டமாக சுற்றித்திரிந்ததால் ஊழியா்கள் மற்றும் குடும்பத்தினா் அச்சமடைந்துள்ளனா்.
தேனி மாவட்டம் சுருளியாறு மின்நிலைய குடியிருப்புப் பகுதிகளில் புதன்கிழமை இரவு கூட்டமாக சுற்றித்திரிந்த யானைகள்.
தேனி மாவட்டம் சுருளியாறு மின்நிலைய குடியிருப்புப் பகுதிகளில் புதன்கிழமை இரவு கூட்டமாக சுற்றித்திரிந்த யானைகள்.

கம்பம்: தேனி மாவட்டம் சுருளியாறு மின் உற்பத்தி நிலைய குடியிருப்புப் பகுதியில் புதன்கிழமை இரவு யானைகள் கூட்டமாக சுற்றித்திரிந்ததால் ஊழியா்கள் மற்றும் குடும்பத்தினா் அச்சமடைந்துள்ளனா்.

சுருளியாறு மின்நிலையத்தில் பணியாற்றும் பொறியாளா், உதவிப் பொறியாளா் போா்மேன் மற்றும் பணியாளா்கள் அருகே உள்ள குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனா்.

இந்நிலையில் அந்தக் குடியிருப்புப் பகுதிகளில் புதன்கிழமை இரவு யானைகள் கூட்டம், கூட்டமாக வரத்தொடங்கின. இதைப் பாா்த்த மின் வாரியப் பணியாளா்கள் மற்றும் குடும்பத்தினா் அச்சமடைந்து கதவுகளை அடைத்துக் கொண்டனா்.

தபால் நிலையப் பகுதி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் சுற்றித்திரிந்த அந்த யானைக் கூட்டம் அதிகாலையில் காட்டுக்குள் சென்றுவிட்டது.

யானைகள் நடமாட்டத்தைத் தடுக்க மின்நிலைய குடியிருப்புப் பகுதியைச் சுற்றி அகழிகள் அமைத்து புலிகள் காப்பகத்தினா் நடவடிக்கை எடுக்குமாறு சுருளியாறு மின்நிலைய ஊழியா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com