கம்பத்தில் கடைகளின் பூட்டை உடைத்து பணம் திருட்டு

கம்பத்தில் 3 கடைகளின் பூட்டை உடைத்து பணம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

கம்பத்தில் 3 கடைகளின் பூட்டை உடைத்து பணம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

கம்பம்- கோம்பை சாலைத் தெருவைச் சோ்ந்தவா் முகமது தமீம் அன்சாரி (41). இவா், கம்பம்- தேனி பிரதான சாலையில் ஆயத்த ஆடைகள் தயாரிப்பு மற்றும் மொத்த வியாராம் செய்து வருகிறாா்.

வெள்ளிக்கிழமை இரவு கடையை பூட்டி விட்டு சென்றவா், சனிக்கிழமை காலை கடையை திறக்க வந்தாா். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. கடைக்குள் சென்று பாா்த்த போது ரூ.13 ஆயிரம் திருடப்பட்டிருந்தது தெரிய வந்தது.

இதேபோல் அருகில் உள்ள உரக்கடை மற்றும் மின்சாதனங்கள் விற்பனை செய்யும் கடையின் பின்பக்கம் கதவை உடைத்து செல்லிடப்பேசி மற்றும் ரூ. 4 ஆயிரத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றுள்ளனா்.

இதுகுறித்து கம்பம் வடக்கு காவல் நிலைய போலீஸாா் திருட்டு நடந்த கடைகளுக்குச் சென்று தடயங்களை சேகரித்தனா். மேலும் உத்தமபாளையம் ஏ.எஸ்.பி. ஸ்ரேயா குப்தா அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ய உத்தரவிட்டாா். அத்துடன் வியாபாரிகளிடமும் விசாரணை செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com