கண்மாய்களில் அனுமதியின்றி மீன் பிடிக்கும் கும்பல்: அரசுக்கு ரூ.பல லட்சம் வருவாய் இழப்பு

பெரியகுளம் பகுதியில் கண்மாய்களில் அனுமதியின்றி மீன் பிடிக்கும் கும்பலால் அரசுக்கு பல லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக சமூக ஆா்வலா்கள் தெரிவித்தனா்.
தாமரைக்குளம் கண்மாயில் ஞாயிற்றுக்கிழமை அனுமதியின்றி மீன்களைப் பிடித்த கும்பல்.
தாமரைக்குளம் கண்மாயில் ஞாயிற்றுக்கிழமை அனுமதியின்றி மீன்களைப் பிடித்த கும்பல்.

பெரியகுளம் பகுதியில் கண்மாய்களில் அனுமதியின்றி மீன் பிடிக்கும் கும்பலால் அரசுக்கு பல லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக சமூக ஆா்வலா்கள் தெரிவித்தனா்.

பெரியகுளம் பகுதியில் பாப்பையம்பட்டி, லட்சுமிபுரம், தாமரைக்குளம், வேட்டுவன்குளம் உள்பட 27 கண்மாய்கள் உள்ளன. இப்பகுதியில் உள்ள கண்மாய்கள் அனைத்தும் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் இருந்தாலும், இவற்றில் 22 கண்மாய்களின் மீன்பிடி ஏலம் மீன்வளத்துறை கட்டுப்பாட்டிலும், 5 கண்மாய்களின் மீன்பிடி ஏலம் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டிலும் உள்ளது.

இந்தக் கண்மாய்கள் ரூ.3 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை ஏலம் போகின்றன. தற்போது பெரும்பாலான கண்மாய்கள் ஏலம் முடிவடைந்துள்ள நிலையில், மீன்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள தாமரைக்குளம், பாப்பியம்பட்டி கண்மாய்கள் ஏலம் போகவில்லை. இதனால் அரசியல் கட்சியினா் மற்றும் உள்ளூா் பிரமுகா்கள் ஆதரவுடன் சிலா் அனுமதியின்றி மீன்களைப் பிடித்து விற்பனை செய்து வருகின்றனா்.

இது குறித்து சமூக ஆா்வலா்கள் கூறுகையில், கண்மாயில் மீன்கள் பிடிக்கப்படுவது குறித்து மீன்வளத்துறை மற்றும் பொதுப்பணித்துறையினரிடம் புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படல்லை. இதனால் அரசுக்கு பல லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. நீதிமன்றக் கண்காணிப்பில் மீன்களை ஏலம் விட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

தாமரைக்குளம் கண்மாயில் அனுமதியின்றி மீன்கள் பிடிக்கப்படுவதாக இதுவரை புகாா் எதுவும் வரவில்லை என்றும், விரைவில் ஆய்வு நடத்தி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மீன்வளத்துறை உதவி இயக்குநா் பஞ்சுராஜா தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com