உசிலம்பட்டியில் அனைத்துக்கட்சியினர் சாலை மறியல்

உசிலம்பட்டியில் மதுரை தேனி தேசிய நெடுஞ்சாலையில் தேவர் சிலை முன்பு மத்திய அரசைக் கண்டித்து அனைத்துக்கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உசிலம்பட்டியில் சாலை மறியலில் ஈடுபட்ட அனைத்துக்கட்சியினர்.
உசிலம்பட்டியில் சாலை மறியலில் ஈடுபட்ட அனைத்துக்கட்சியினர்.

உசிலம்பட்டியில் மதுரை தேனி தேசிய நெடுஞ்சாலையில் தேவர் சிலை முன்பு மத்திய அரசைக் கண்டித்து அனைத்துக்கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசு நிறைவேற்றியுள்ள மூன்று வேளாண் திருத்தச் சட்டங்கள், மோட்டர் வாகன திருத்தச் சட்டம், மின்சார திருத்தச் சட்டம், தொழிலாளர் விரோத சட்டங்களை திரும்பப் பெற வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மையம் ஆக்கக் கூடாது. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உருளை விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும். 

அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், பத்திரிக்கையாளர்களின் கைப்பேசி ஒட்டுக் கேட்பு விவகாரத்தை உச்ச நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை செய்ய வேண்டும். புதுதில்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் விவசாயிகளை பிரதமர் அழைத்துப் பேச வேண்டும் . அவர்களின் போராட்டத்தை ஒடுக்கும் முயற்சியை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. 

இதில் திமுக சார்பாக ஒன்றிய செயலாளர் இ.சுதந்திரம் பார்வர்ட் பிளாக் கட்சியின் சார்பாக ஐ.ராஜா ஒன்றிய விவசாய அணி கோடாங்கி ராஜாமணி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கலந்துகொண்டு சாலை மறியலில் ஈடுபட்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதில் கலந்துகொண்ட 60 ஆண்கள் 14 பெண்களை காவல்துறையினர் கைது செய்து மதுரை ரோட்டில் உள்ள தனியார் மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com