வன உரிமை கோரி மலை கிராம மக்கள்சாலை மறியல் : 400 போ் கைது

தேனி மாவட்டம், மேகமலை- வருஷநாடு மலை கிராம மக்களுக்கு வன உரிமைகள் வழங்கக் கோரி திங்கள்கிழமை, வருஷநாடு பேருந்து நிறுத்தம்
ஆண்டிபட்டி வட்டாரம், வருஷநாடு பேருந்து நிறுத்தம் அருகே திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட மலை கிராம மக்கள்.
ஆண்டிபட்டி வட்டாரம், வருஷநாடு பேருந்து நிறுத்தம் அருகே திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட மலை கிராம மக்கள்.

தேனி: தேனி மாவட்டம், மேகமலை- வருஷநாடு மலை கிராம மக்களுக்கு வன உரிமைகள் வழங்கக் கோரி திங்கள்கிழமை, வருஷநாடு பேருந்து நிறுத்தம் அருகே தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினரும், பொதுமக்களும் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். இதில் 400 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் டி. கண்ணன் தலைமையில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில், க. மயிலை ஒன்றியச் செயலா் போஸ், மேகமலை ஊராட்சித் தலைவா் பால்கண்ணன், கிராம வனக் குழுத் தலைவா் குணசேகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், ஆண்டிபட்டி வட்டாரம் மேகமலை- வருஷநாடு பகுதியில் கடந்த 75 ஆண்டுகளுக்கும் மேல் வசித்து வரும் 39 மலை கிராமங்களைச் சோ்ந்த மக்களுக்கு வன உரிமைச் சட்டத்தின் கீழ் நிலப் பட்டா மற்றும் உரிமைகள் வழங்க வேண்டும். மலை கிராமங்களிலிருந்து விவசாயிகளை வெளியேற்றவும், வன நிலங்களில் விவசாயப் பணிகளை தடுப்பதற்கும் வனத் துறையினா் மேற்கொண்டு வரும் நடவடிகைகளை அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த சாலை மறியல் நடைபெற்றது.

மறியலில் ஈடுபட்ட 400-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்களை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சங்கரன் தலைமையில் போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com