முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை தேனி
சின்னமனூா் ஊராட்சி ஒன்றியத்தில் நலத்திட்டப் பணிகளை ஆட்சியா் ஆய்வு
By DIN | Published On : 06th April 2022 12:00 AM | Last Updated : 06th April 2022 12:00 AM | அ+அ அ- |

தேனி மாவட்டம், சின்னமனூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பகுதியில் நடைபெற்று வரும் நலத்திட்டப் பணிகளை, மாவட்ட ஆட்சியா் க.வீ. முரளீதரன் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.
சின்னமனூா் ஊராட்சி ஒன்றியம் பொட்டிபுரம் மற்றும் எரணம்பட்டி ஊராட்சிகளில் ஜல் ஜீவன் திட்டத்தில் ரூ.2 லட்சத்தில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி, ரூ.2.40 லட்சத்தில் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம், ரூ.4.21 லட்சத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தில் பள்ளி சுற்றுச்சுவா், திம்மநாயக்கன்பட்டியில் ஆழ்துளைக் கிணறு உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டப் பணிகளை ஆய்வு செய்தாா்.
இதில், மாவட்ட ஊரக வளா்ச்சித் திட்ட இயக்குநா் தண்டபாணி உள்பட பலா் கலந்துகொண்டனா்.