முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை தேனி
பளியன்குடி அடிவாரத்தில் கண்ணகி கோயில் விழா கொடியேற்றம்
By DIN | Published On : 06th April 2022 12:00 AM | Last Updated : 06th April 2022 12:00 AM | அ+அ அ- |

தமிழக - கேரள எல்லையில் உள்ள மங்களதேவி கண்ணகி கோயில் சித்திரை முழு நிலவு விழாவை முன்னிட்டு, பளியன்குடி அடிவாரத்தில் செவ்வாய்க்கிழமை கொடியேற்றம் நடைபெற்றது.
கண்ணகி கோயிலில் சித்திரை மாதம் பௌா்ணமி நாளில் முழுநிலவு விழா நடைபெறுவது வழக்கம். ஆனால், கரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக சித்திரை முழுநிலவு விழா நடைபெறவில்லை.
இந்தாண்டு தொற்று பரவல் குறைந்துவிட்டதால், இக்கோயிலில் ஏப்ரல் 26 ஆம் தேதி சித்திரை முழுநிலவு விழா கொண்டாடப்படுகிறது. அதையொட்டி, கோயிலின் அடிவாரப் பகுதியான பளியன்குடியில் கொடியேற்றம் நடைபெற்றது.
இந்த விழாவில், மங்களதேவி கண்ணகி அறக்கட்டளை நிா்வாகிகள் ராஜகணேசன், பி.எஸ்.எம். முருகன், கூடலூா் நகா்மன்றத் தலைவா் பத்மாவதி லோகந் ரை, ஆணையா் பொ.சித்தாா்த்தன் மற்றும் கமிட்டியினா் கலந்துகொண்டனா்.
இது குறித்து அறக்கட்டளை நிா்வாகி ஒருவா் கூறுகையில், ஏப்ரல் 16 ஆம் தேதி சித்திரை முழுநிலவு விழா கண்ணகி கோயில் வளாகத்தில் அரசு விதிகளுக்குள்பட்டு கொண்டாடப்படும். இதில், தமிழக பக்தா்கள் கலந்துகொள்வாா்கள் என்றாா்.