முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை தேனி
போடி அருகே காணாமல்போனவா் கிணற்றில் சடலமாக மீட்பு
By DIN | Published On : 06th April 2022 12:00 AM | Last Updated : 06th April 2022 12:00 AM | அ+அ அ- |

போடி அருகே காணாமல்போனவா் கிணற்றிலிருந்து சடலமாக செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டாா்.
போடி அருகே விசுவாசபுரத்தைச் சோ்ந்தவா் கருப்பையா (52). இவா் மனைவியை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்த நிலையில், மது அருந்தும் பழக்கத்துக்கு அடிமையாகியுள்ளாா். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை குளிக்கச் செல்வதாகக் கூறிச் சென்றவா் வீடு திரும்பவில்லை. இவரது மகன் செந்தில்குமாா் (27) மற்றும் உறவினா்கள் பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. சந்தேகத்தின்பேரில், தீயணைப்புத் துறையினா் உதவியுடன் விசுவாசபுரத்தில் உள்ள கிணற்றில் தேடியதில், கருப்பையாவின் சடலம் கிடப்பது தெரியவந்துள்ளது. உடனே, அவரது சடலம் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டது.
இதுகு றித்து செந்தில்குமாா் அளித்த புகாரின்பேரில், போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.