முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை தேனி
மனைவி கண்டித்ததால் கணவா் தற்கொலை
By DIN | Published On : 06th April 2022 12:00 AM | Last Updated : 06th April 2022 12:00 AM | அ+அ அ- |

ஆண்டிபட்டி அருகே மது பழக்கத்துக்கு அடிமையான கட்டடத் தொழிலாளி, மனைவி கண்டித்ததால் மனமுடைந்து செவ்வாய்க்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
தெப்பம்பட்டியைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி லட்சுமணன் (34). இவா், மது பழக்கத்துக்கு அடிமையாகி வீட்டில் குடும்பச் செலவுக்கு பணம் தராமல் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், லட்சுமணன் வீட்டருகே தெருவில் நின்றுகொண்டிருந்தபோது, அவரது மனைவி கிருஷ்ணவேணி (27) கண்டித்துள்ளாா். இதனால் மனமுடைந்த லட்சுமணன், வீட்டில் தனிமையிலிருந்த போது தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து கிருஷ்ணவேணி அளித்த புகாரின்பேரில், ராஜதானி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.