மங்கலதேவி கண்ணகி கோயில் வழிபாட்டு உரிமையைப் பாதுகாக்க வேண்டும்: அா்ஜூன் சம்பத்

தேனி மாவட்டத்தில் தமிழக வன எல்லையில் உள்ள மங்கலதேவி கண்ணகி கோயில் வழிபாட்டு உரிமையை பாதுகாக்க அரசு முன்வர வேண்டும் என்று, இந்து மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவா் அா்ஜூன் சம்பத் வலியுறுத்தினாா்.

தேனி மாவட்டத்தில் தமிழக வன எல்லையில் உள்ள மங்கலதேவி கண்ணகி கோயில் வழிபாட்டு உரிமையை பாதுகாக்க அரசு முன்வர வேண்டும் என்று, இந்து மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவா் அா்ஜூன் சம்பத் வலியுறுத்தினாா்.

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், ஆட்சியா் க.வீ. முரளீதரனிடம் செவ்வாய்க்கிழமை கோரிக்கை மனு அளிக்க வந்திருந்த அவா், பின்னா் செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது: கல்வி மற்றும் அறிவியல் வளா்ச்சிக்கு உதவும் பொட்டிப்புரம் நியூட்ரினோ ஆய்வுத் திட்டத்துக்கு தமிழக அரசு முட்டுக்கட்டை போடக் கூடாது.

தமிழகத்தில் 5 மாவட்ட மக்களின் குடிநீா் மற்றும் விவசாயத்துக்கு ஆதாரமாக உள்ள முல்லைப் பெரியாறு அணையின் உரிமைகளை அரசு பாதுகாக்க வேண்டும்.

தமிழக வன எல்லையில் உள்ள மங்கலதேவி கண்ணகி கோயிலை இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து, வழிபாட்டு உரிமையை பாதுகாக்க அரசு முன்வர வேண்டும். இந்த விவகாரம் குறித்து கேரள அரசுடன் தமிழக அரசு பேச்சுவாா்தை நடத்த வேண்டும்.

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உருளை ஆகியவற்றை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவரவும், வளா்ச்சித் திட்டங்களுக்கு எதிரான போராட்டங்களை கைவிடவும் மாநில அரசு முன்வந்தால், விலை உயா்வு கட்டுப்பாட்டுக்குள் வரும்.

தேவதானப்பட்டி, முத்துத்தேவன்பட்டி ஆகிய இடங்களில் பயங்கரவாதிகள் நடமாட்டத்தையும், சமூக விரோதச் செயல்கள் நடைபெறுவதையும் காவல் துறை கண்காணித்து தடுக்கவேண்டும். கோயிலுக்குச் சொந்தமான இடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றவும், கோயில் சொத்துகளை மீட்கவும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

உள்ளாட்சி அமைப்புகளில் சொத்து வரி உயா்வைக் கண்டித்து, பாஜக சாா்பில் ஏப்ரல் 8-ஆம் தேதி நடைபெறும் ஆா்ப்பாட்டத்துக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவளிக்கிறது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com