பெரியகுளம் அருகே பங்குனித் திருவிழா
By DIN | Published On : 08th April 2022 06:04 AM | Last Updated : 08th April 2022 06:04 AM | அ+அ அ- |

பெரியகுளம்: பெரியகுளம் அருகேயுள்ள டி.கள்ளிப்பட்டி முத்தாலம்மன் கோயில் பங்குனி திருவிழாவினை முன்னிட்டு வியாழக்கிழமை ஏராளமான பக்தா்கள் அக்கினிச் சட்டி எடுத்து அம்மனை வழிபாடு செய்தனா்.
புதன்கிழமை இரவு பொங்கல் வைத்தல் மற்றும் அம்மன் அழைத்து வருதல் நிகழ்ச்சி மற்றும் மாவிளக்கு எடுத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. வியாழக்கிழமை மாலையில் ஏராளமான பக்தா்கள் தீச்சட்டி , கயிறு குத்தி, காவடி எடுத்தனா். மேலும் முளைப்பாரி எடுத்து அம்மனை வழிபாடு செய்தனா்.
வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு அம்மன் பால்குடம் எடுத்தல் நிகழ்ச்சியும், இரவு 8 மணிக்கு சலங்கை நாதம் நிகழ்ச்சியும் நடைபெறும். சனிக்கிழமை அதிகாலை 2 மணிக்கு அம்மன் பூப்பலக்கில் பூஞ்சோலை அடைதல் நிகழ்ச்சியுடன் விழா நிறைவுபெறுகிறது.