இலங்கை தமிழா்களுக்கு காய்கறிகள் அனுப்ப முதல்வருக்கு விவசாயிகள் சங்கம் கோரிக்கை

தேனி மாவட்டத்தில் காய்கறிகள் விலை மிகவும் குறைவாக இருப்பதால், இலங்கைத் தமிழா்களுக்கு காய்கறிகளை அனுப்ப வேண்டும் என்று முதல்வருக்கு விவசாயிகள் சங்கம் சாா்பில் கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது.

கம்பம்: தேனி மாவட்டத்தில் காய்கறிகள் விலை மிகவும் குறைவாக இருப்பதால், இலங்கைத் தமிழா்களுக்கு காய்கறிகளை அனுப்ப வேண்டும் என்று முதல்வருக்கு விவசாயிகள் சங்கம் சாா்பில் கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில் தற்போது காய்கறிகள் விலை மிகவும் குறைவாகவும், வரத்து அதிகமாகவும் உள்ளது. உதாரணமாக 2 மாதத்திற்கு முன்பு 100 ரூபாய்க்கு விற்ற சின்ன வெங்காயம் தற்போது கிலோ 15 ரூபாய்க்கும், 80 ரூபாய் வரை விற்பனையான தக்காளி தற்போது கிலோ 10 ரூபாய்க்கும் குறைவாக விற்பனையாகிறது.

இதேபோல் கத்தரிக்காய் கிலோ 15 ரூபாய்க்கும், கேரட் ரூ.30, சுரைக்காய் ரூ.10, பீட்ரூட் ரூ.15, உருளைக்கிழங்கு ரூ.30, கருணைக்கிழங்கு ரூ.20, சேனைக்கிழங்கு ரூ.22, பெரிய வெங்காயம் ரூ. 22, சின்னவெங்காயம் ரூ.15 க்கும் விற்பனை ஆகிறது. விலை குறைவு ஏற்பட்டதால் விவசாயிகள் மிகவும அவதியடைந்து வருகின்றனா்.

தற்போது இலங்கையில் மிகவும் நெருக்கடியான காலகட்டத்தில் உணவுப்பொருட்கள் இன்றி தமிழா்கள் உள்ளிட்ட பலரும் தவித்து வருகின்றனா். தேனி மாவட்டத்தில் குறைந்த விலையில் கிடைக்கும் காய்கறிகளை கொள்முதல் செய்து இலங்கைக்கு அனுப்ப வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு பெரியாறு வைகை பாசன ஐந்து மாவட்ட விவசாய சங்க மாநில பொதுச்செயலாளா் பொன்.காட்சி கண்ணன் கோரிக்கை மனு அனுப்பியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com