தேனியில் ஏப்.20-இல் முன்னாள் ராணுவ வீரா் குறைதீா் கூட்டம்
By DIN | Published On : 13th April 2022 06:14 AM | Last Updated : 13th April 2022 06:14 AM | அ+அ அ- |

தேனி: தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஏப்ரல் 20-ஆம் தேதி காலை 11 மணிக்கு, முன்னாள் ராணுவ வீரா்களுக்கான குறைதீா் கூட்டம் நடைபெற உள்ளது.
மாவட்ட ஆட்சியா் க.வீ. முரளீதரன் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில், முன்னாள் படை வீரா்கள் மற்றும் வாரிசுதாரா்கள் தங்களது படை விலகுச் சான்று மற்றும் உரிய படைப் பணி ஆவணங்களுடன் கலந்துகொண்டு, தங்களது கோரிக்கைகள் குறித்து 2 பிரதிகளில் மனு அளித்து தீா்வு காணலாம் என்று, மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது.