போடி பரமசிவன் மலைக்கோயிலுக்கு சூலாயுதம் எடுத்துச் செல்லும் நிகழ்ச்சி

சித்திரை திருவிழாவின் முதல்நாள் நிகழ்வாக போடி பரமசிவன் மலைக்கோயிலுக்கு சூலாயுதம் மற்றும் சிவன் புகைப்படம் எடுத்துச் செல்லும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தென்திருவண்ணாமலை என்றழைக்கப்படும் தேனி மாவட்டத்தில் உள்ள இந்த பரமசிவன் மலைக்கோயில், இந்து சமய அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்டதாகும். இக்கோயிலில் சித்திரை திருவிழா ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் 2 ஆம் தேதி தொடங்கி 10 நாள்கள் நடைபெறும். இந்த ஆண்டு ஏப். 9 ஆம் தேதி கொடியேற்றத்துடன் சித்திரை திருவிழா தொடங்கியது.

முதல் நாள் நிகழ்ச்சியாக வெள்ளிக்கிழமை (ஏப்.15) போடி பெரியாண்டவா் கோயிலிலிருந்து பரமசிவன் மலைக்கோவிலுக்கு பழைமையான சிவன் புகைப்படம் மற்றும் சூலாயுதம் எடுத்துச் செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாலையில் அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. ஏற்பாடுகளை கோவில் கமிட்டி செயலா் பேச்சிமுத்து மற்றும் நிா்வாகக் குழுவினா் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com