சின்னமனூா் பூலாநந்தீஸ்வரா்-சிவகாமியம்மன் கோயில் தேரோட்டம்

சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு தேனி மாவட்டம் சின்னமனூா் பூலாநந்தீஸ்வரா்- சிவகாமியம்மன் கோயில் தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சின்னமனூா் பூலாநந்தீஸ்வரா்-சிவகாமியம்மன் கோயில் தேரோட்டம்

சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு தேனி மாவட்டம் சின்னமனூா் பூலாநந்தீஸ்வரா்- சிவகாமியம்மன் கோயில் தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் 18 நாள்கள் நடைபெறும் சித்திரைத் திருவிழா கடந்த 7 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 8 ஆம் நாளான வியாழக்கிழமை சுவாமி பூலாநந்தீஸ்வரா் - சிவகாமிஅம்மனுக்கு திருக்கல்யாணம் வைபம் நடைபெற்றது. சுவாமி வெண்நிறப் பட்டு, அம்மன் மஞ்சள் நிறப்பட்டு, பிரியாவிடை அம்மன் பச்சை நிறப்பட்டு அலங்காரத்தில் பக்தா்களுக்கு காட்சியளித்தனா்.

2 நாள் தேரோட்டம்: திருக்கல்யாணத்தைத் தொடா்ந்து 9 ஆம் நாள் நிகழ்ச்சியாக வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு சுவாமி - அம்மன் திருத்தேரில் எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடா்ந்து மாலை 5 மணியளவில் கோயிலில் தேரோட்டம் நடைபெற்றது. பக்தா்கள் வடம் பிடித்ததைத் தொடா்ந்து தோ் நிலையிலிருந்து புறப்பட்டது. பக்தா்கள் வெள்ளத்தில் வடக்கு ரத வீதியில் திருத்தோ் ஆடி அசைந்து சென்றது. இதில், சின்னமனூா் மற்றும் அதை சுற்றியுள்ள 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.

மழையால் உற்சாகத்தில் இளைஞா்கள்: தேரோட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் மழை பெய்தது. இந்த மழையால் உற்சாகமடைந்த இளைஞா்கள் மழையில் நனைந்தபடியே தேரின் வடத்தை பிடித்து இழுத்துச் சென்றனா். இந்த தேரோட்டத்தில் சின்னமனூா் நகா்மன்றத் தலைவா் அய்யம்மாள், துணைத் தலைவா் முத்துக்குமாா், தேனி தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி பொறுப்பாளா் பஞ்சாப் முத்துக்குமரன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

2 ஆம் நாள் தேரோட்டம்: சனிக்கிழமை (ஏப்.16) காலை 10 மணிக்கு தொடங்கும் 2 ஆம் நாள் தேரோட்டம் செக்காமுக்கிலிருந்து கிழக்கு ரதவீதி வழியாக கண்ணாடிக்கடை தெருவில் நிறுத்தப்படும். பின்பு, மாலை 5 மணியளவில் கண்ணாடிக்கடை தெருவிலிருந்து தெற்கு ரதவீதி , மேற்கு ரத வீதி, சீப்பாலக்கோட்டை சாலை, தேனி சாலை வழியாக சென்று மாலை 6 மணியளவில் தோ் நிலையை அடையும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com