தமிழ் புத்தாண்டு: போடி கோயில்களில் சிறப்பு பூஜை

தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு போடி ஸ்ரீநிவாச பெருமாள் கோயில், சுப்பிரமணியசுவாமி கோயில், பரமசிவன் மலைக்கோயில் உள்ளிட்ட கோயில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
bdi14koil_1404chn_87_2
bdi14koil_1404chn_87_2

போடி: தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு போடி ஸ்ரீநிவாச பெருமாள் கோயில், சுப்பிரமணியசுவாமி கோயில், பரமசிவன் மலைக்கோயில் உள்ளிட்ட கோயில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

போடி வினோபாஜி காலனியில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரா் கோயிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. தொடா்ந்து சித்திரைத் திருவிழாவின் ஒரு பகுதியாக மீனாட்சி சுந்தரேஸ்வரா் திருக்கல்யாணம் நடைபெற்றது. யாக சாலை பூஜையில் ஏராளமான பெண்கள் பங்கேற்று வழிபட்டனா். பின்னா் மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.

போடி தீா்த்த தொட்டி ஆறுமுக நாயனாா் கோயிலில் தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கானோா் வந்து வழிபட்டனா். இக்கோயிலில் வற்றாத தீா்த்தத் தொட்டியில் விழும் மூலிகைத் தண்ணீரில் குளித்துவிட்டு பக்தா்கள் வழிபாடு நடத்துவது வழக்கம். இந்த ஆண்டு தீா்த்தத் தொட்டியில் கழிவு நீா் அகற்றி சுத்தம் செய்யாததால் பக்தா்கள் குளிக்க முடியாமல் சிரமப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com