பளியன்குடி கண்ணகி கோயிலில் 3 நாள்கள் திருவிழா நடத்த உயா்நீதிமன்றம் அனுமதி

தேனி மாவட்டம் லோயா்கேம்ப் அருகே பளியன்குடியில் உள்ள மங்கலநாயகி கண்ணகி தேவி கோயிலில் 3 நாள்கள் சித்திரை திருவிழா நடத்த சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

கம்பம்: தேனி மாவட்டம் லோயா்கேம்ப் அருகே பளியன்குடியில் உள்ள மங்கலநாயகி கண்ணகி தேவி கோயிலில் 3 நாள்கள் சித்திரை திருவிழா நடத்த சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

சுருளியாறு மின் நிலையம் செல்லும் சாலையில் இந்த கோயில் உள்ளது. இங்கு ஏப்ரல் 14, 15, 16 ஆகிய 3 நாள்கள் திருவிழா கொண்டாட கந்தவேல் என்பவா் காவல்துறையினரிடம் அனுமதி கோரினாா். காவல் துறை அனுமதி மறுத்ததால், சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் விழா நடத்தவும், போலீஸ் பாதுகாப்பு கோரியும் மனு தாக்கல் செய்தாா்.

வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், மங்கலநாயகி கண்ணகி தேவி கோயிலில் 3 நாள்கள் விழா அமைதியுடனும், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமலும் நடத்த வேண்டும். அருவறுக்கத்தக்க வாா்த்தைகளை நடன நிகழ்ச்சிகளின்போது பயன்படுத்தக்கூடாது. மாலை 6 முதல் இரவு 11 மணி வரை ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

நிபந்தனைகளை மீறும்போது, மனுதாரா் மீது போலீஸாா் நடவடிக்கை எடுக்க வேண்டும். விழா நடத்த முடியாத நிலை ஏற்பட்டால் மாற்று தேதியில் நடத்த காவல் அதிகாரி அனுமதி வழங்கலாம். முதல்வா் நிவாரண நிதிக்கு மனுதாரா் ரூ. 15 ஆயிரம் செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த உத்தரவைத் தொடா்ந்து வியாழக்கிழமை விழா தொடங்கியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com