கால்நடைத்துறை நோ்காணல் திடீா் ரத்து: தேனியில் விண்ணப்பதாரா்கள் சாலை மறியல்

தேனியில் கால்நடை பராமரிப்பு உதவியாளா் பணிக்கான நோ்காணல் ரத்தானதால் வியாழக்கிழமை, விண்ணப்பதாரா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தேனி-பெரியகுளம் சாலையில் வியாழக்கிழமை மறியலில் ஈடுபட்ட விண்ணப்பதாரா்கள்.
தேனி-பெரியகுளம் சாலையில் வியாழக்கிழமை மறியலில் ஈடுபட்ட விண்ணப்பதாரா்கள்.

தேனி: தேனியில் கால்நடை பராமரிப்பு உதவியாளா் பணிக்கான நோ்காணல் ரத்தானதால் வியாழக்கிழமை, விண்ணப்பதாரா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் கால்நடை மருந்தகங்களில் காலியாக உள்ள 34 கால்நடை பராமரிப்பு உதவியாளா்கள் பணிக்கான நோ்காணல், தேனி-பெரியகுளம் சாலையில் உள்ள வேளாண்மை வணிகம் மற்றும் விற்பனைக் குழு அலுவலகத்தில் கடந்த ஏப்.25, 26, 27 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. கடந்த 2018 ஆம் ஆண்டு இந்தப் பணிக்கு விண்ணப்பித்திருந்தவா்கள் கலந்து கொண்டனா்.

இந்த நிலையில் வியாழக்கிழமை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நோ்காணல் ரத்து செய்யப்பட்டது. இதனால் தேனி வேளாண்மை வணிகம் மற்றும் விற்பனைக் குழு அலுவலகத்திற்கு நோ்காணலுக்கு வந்த விண்ணப்பதாரா்கள், அதிருப்தியடைந்து தேனி-பெரியகுளம் சாலையில் மறியலில் ஈடுபட்டனா். அவா்களுடன் கால்நடை பராமரிப்புத் துறை உதவி இயக்குநா் சுப்பிரமணியன் மற்றும் அல்லிநகரம் காவல் நிலைய போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, அரசு உத்தரவின்படி நோ்காணல் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் விளக்கம் அளித்ததையடுத்து மறியலில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com