முல்லைப் பெரியாறு அணையிலிருந்து  உபரி நீர் கேரளத்திற்கு திறப்பு

முல்லைப் பெரியாறு அணையில் இருந்து கேரளத்திற்கு  உபரி நீர் வெள்ளிக்கிழமை மதியம் 1 மணிக்கு விநாடிக்கு 534 கன அடியாக, தமிழக அதிகாரிகளால் திறக்கப்பட்டது.
முல்லைப் பெரியாறு அணையிலிருந்து  உபரி நீர் கேரளத்திற்கு திறப்பு

கம்பம்: முல்லைப் பெரியாறு அணையில் இருந்து கேரளத்திற்கு  உபரி நீர் வெள்ளிக்கிழமை மதியம் 1 மணிக்கு விநாடிக்கு 534 கன அடியாக, தமிழக அதிகாரிகளால் திறக்கப்பட்டது.

முல்லைப் பெரியாறு அணையில் வெள்ளிக்கிழமை நீர்மட்டம் 137.50 அடி உயரமாக இருந்தது. அணைக்குள் நீர் வரத்து விநாடிக்கு 7,616 கனஅடியாகவும், அணையிலிருந்து தமிழக பகுதிக்கு விநாடிக்கு, 2,166 கனஅடி திறந்துவிடப்பட்டது.

ரூல் கர்வ் அட்டவணைப்படி கேரள மாநிலம் இடுக்கி அணைக்கு செல்லும் விதமாக விநாடிக்கு 534 கனஅடி தண்ணீர் மதியம் 1 மணிக்கு, தமிழக பொதுப்பணித்துறையின் பெரியாறு அணை செயற்பொறியாளர் சாம்இர்வின்,  அணையின் மூன்று மதகுகளை ( வி-2, வி-3, வி-4 ) 30 செ.மீ., உயரம் வரை அதிகரித்து திறந்து வைத்தார். அதில் விநாடிக்கு, 534 கன அடி தண்ணீர் இடுக்கி அணையை நோக்கி சென்றது.

நிகழ்வில் உதவி கோட்ட பொறியாளர் குமார், உதவி பொறியாளர் பி.ராஜகோபால் மற்றும் பொதுப்பணித்துறை ஊழியர்கள் இருந்தனர்.

விவசாயிகள் கண்டனம்

ரூல் கர்வ் விதியை பயன்படுத்தி கேரள அரசு முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்வதை தடுக்கும் செயலை கண்டிப்பதாகவும், ரூல் கர்வ் அட்டவணை ரத்து செய்ய உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்று பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் ச.அன்வர் பாலசிங்கம் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com