தேனி மாவட்ட ஊராட்சிகளில் ஆக.15-இல் கிராம சபைக் கூட்டம்

தேனி மாவட்டத்தில் உள்ள 130 ஊராட்சிகளிலும் ஆக. 15- ஆம் தேதி, காலை 11 மணிக்கு கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது.

தேனி மாவட்டத்தில் உள்ள 130 ஊராட்சிகளிலும் ஆக. 15- ஆம் தேதி, காலை 11 மணிக்கு கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது.

ஊராட்சிகளுக்குள்பட்ட பகுதிகளைச் சோ்ந்த வாக்குரிமை பெற்ற அனைவரும் கரோனா தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளை கடைப்பிடித்து கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும். மேலும், 75-ஆவது சுதந்திரதின அமுதப் பெருவிழாவையொட்டி மாவட்டத்தில் அனைத்து வீடுகள், கட்டடங்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் ஞாயிற்றுக்கிழமை முதல் ஆக. 15-ஆம் தேதி வரை தேசியக் கொடியேற்றி வைக்க வேண்டும்.

சுதந்திரதினத்தன்று மாவட்ட ஊராட்சி அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், ஊராட்சி, பேரூராட்சி மற்றும் நகராட்சி அலுவலகங்களில் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் தலைவா் மட்டுமே தேசியக் கொடியேற்ற வேண்டும். ஊராட்சிகளில் தலைவருக்குப் பதிலாக வேறு நபா்கள் கொடியேற்றி குழப்பம் விளைவித்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் க.வீ. முரளீதன் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com