தாமரைக்குளம் பேரூராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து உறுப்பினா்கள் வெளிநடப்பு
By DIN | Published On : 31st August 2022 12:32 AM | Last Updated : 31st August 2022 12:32 AM | அ+அ அ- |

பேரூராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து மன்றக் கூட்டத்திலிருந்து செவ்வாய்க்கிழமை வெளிநடப்பு செய்த திமுக உறுப்பினா்கள்.
பெரியகுளம் அருகே தாமரைக்குளம் பேரூராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து திமுக உறுப்பினா்கள் செவ்வாய்க்கிழமை வெளிநடப்பு செய்தனா்.
தாமரைக்குளம் பேரூராட்சியில் 30 வாா்டுகள் உள்ளன. இங்கு திமுகவைச் சோ்ந்த பால்பாண்டி பேரூராட்சித் தலைவராகவும், ஆளவந்தான் செயல் அலுவலராகவும் உள்ளனா். இப்பேரூராட்சியின் மாதாந்திர மன்றக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில் முறையான வரவு- செலவு கணக்குகள் தாக்கல் செய்யப்படுவதில்லை. உறுப்பினா்களை கலந்தாலோசிக்காமல் தலைவா் மற்றும் செயல் அலுவலா் செயல்படுவதாகக் கூறி திமுக உறுப்பினா்கள் வசந்தா, முருகன், பாண்டி, மைதிலி, சாந்தி மற்றும் ஜாஹீா் ஆகியோா் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனா்.