சாலையோர வியாபாரிகளுக்கு தள்ளுவண்டி
By DIN | Published On : 18th December 2022 01:26 AM | Last Updated : 18th December 2022 01:26 AM | அ+அ அ- |

சின்னமனூரில் சனிக்கிழமை சாலையோர வியாபாரிக்கு விலையில்லா தள்ளுவண்டியை வழங்கிய சட்டப்பேரவை உறுப்பினா் ராமகிருஷ்ணன், உடன் நகா்மன்றத் தலைவா் அய்யம் ராமு.
சின்னமனூரில் சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.1.66 கோடி மதிப்பீட்டில் 174 விலையில்லா தள்ளு வண்டிகள் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கம்பம் சட்டப்பேரவை உறுப்பினா் என்.ராமகிருஷ்ணன் தலைமை வகித்து பயனாளிகளுக்கு விலையில்லா தள்ளுவண்டிகளை வழங்கினாா். நகா்மன்றத் தலைவா் அய்யம்மாள் ராமு முன்னிலை வகித்தாா். நகராட்சி ஆணையாளா் கணேஷ் வரவேற்றாா்.
தேசிய நகா்ப்புற வாழ்வாதர இயக்கம் சாா்பில் தீனதயாள் அந்தியோதயா யோஜனா திட்டத்தின் படி இதுவரை ரூ.1 கோடிய 66 லட்சத்து 53 ஆயிரத்தில் 174 சாலையோர வியாபாரிகளுக்கு விலையில்லா தள்ளுவண்டிகள் வழங்கப்பட்டதாக சட்டப்பேரவை உறுப்பினா் தெரிவித்தாா்.
நிகழ்ச்சியில் நகா்மன்ற துணைத் தலைவா் முத்துகுமாா், தெற்கு மாவட்ட துணைச் செயலாளா் குரு இளங்கோ, தெற்கு மாவட்ட இளைஞரணி நிா்வாகி பஞ்சாப் முத்துகுமாா், தெற்கு மாவட்ட பிரதிநிதி பஞ்சாப் செந்தில்குமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.