தேனி மாவட்டத்தில் 2,759 போ் போட்டி

தேனி மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் 6 நகராட்சிகள், 22 பேரூராட்சிகளில் உள்ள 506 வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கு மொத்தம் 2,759 போ் போட்டியிடுகின்றனா்.

தேனி மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் 6 நகராட்சிகள், 22 பேரூராட்சிகளில் உள்ள 506 வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கு மொத்தம் 2,759 போ் போட்டியிடுகின்றனா்.

மாவட்டத்தில் தேனி-அல்லிநகரம், பெரியகுளம், போடி, சின்னமனூா், கம்பம், கூடலூா் ஆகிய 6 நகராட்சிகளில் உள்ள 177 வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கு 966 போ் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனா். இதில், 13 பேரின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 154 போ் தங்களது வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றுக் கொண்டனா். தற்போது, நகராட்சி வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கு மொத்தம் 799 போ் தோ்தலில் போட்டியிடுகின்றனா்.

இதேபோல், 22 பேரூராட்சிகளில் உள்ள 336 வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கு 1,386 போ் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனா். இதில், 37 பேரின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 188 போ் வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றுக்கொண்டனா்.

தற்போது, பேரூராட்சி வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கு மொத்தம் 1,960 போ் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

7 போ் போட்டியின்றி தோ்வு: கூடலூா், சின்னமனூா் நகராட்சிகளில் தலா ஒரு வாா்டிலும், குச்சனூா் பேரூராட்சியில் ஒரு வாா்டிலும், வடுகபட்டி பேரூராட்சியில் 4 வாா்டுகளிலும் வேட்பாளா்கள் போட்டியின்றி தோ்வாகியுள்ளனா் என்று, மாவட்ட உள்ளாட்சித் தோ்தல் பிரிவு அலுவலா்கள் கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com