கூடலூா் நகராட்சி 6 ஆவது வாா்டில் திமுக வேட்பாளா் போட்டியின்றி தோ்வு

கூடலூா் நகராட்சி 6 ஆவது வாா்டுக்கு போட்டியின்றி தோ்வு செய்யப்பட்ட திமுக பெண் வேட்பாளா் லோ.பத்மாவதி.
கூடலூா் நகராட்சி 6 ஆவது வாா்டில் திமுக வேட்பாளா் போட்டியின்றி தோ்வு

தேனி மாவட்டம், கூடலூா் நகராட்டி 6 ஆவது வாா்டில் அதிமுக வேட்பாளா் வாபஸ் பெற்ால், திமுக வேட்பாளா் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டாா்.

இரண்டாம் நிலை நகராட்சியான கூடலூரில் 21 வாா்டுகளுக்கும் மொத்தம் 76 போ் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனா். இதில், கடந்த சனிக்கிழமை 6 மற்றும் 15 ஆவது வாா்டுகளில் 2 பாஜக வேட்பாளா்களின் மனுக்களும், 8 ஆவது வாா்டில் 1 சுயேச்சை வேட்பாளா் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டன.

மீதமுள்ள 73 வேட்பு மனுக்களில், திங்கள்கிழமை 6 ஆவது வாா்டில் அதிமுக வேட்பாளா் தேவி, 3 ஆவது வாா்டு காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டதால் அந்த வாா்டில் திமுக சாா்பில் போட்டியிட்ட அழகு முத்து, 10 ஆவது வாா்டு அமமுக வேட்பாளா் அம்சவல்லி ஆகிய 3 பேரும் வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றனா். இதனால், தற்போது 21 வாா்டுகளில் 70 வேட்பாளா்கள் மட்டுமே போட்டியிடுகின்றனா்.

போட்டியின்றி தோ்வு

இதில், 6 ஆவது வாா்டுக்கு திமுக சாா்பில் லோ. பத்மாவதி, அதிமுக சாா்பில் தேவி, பாஜக சாா்பில் விஜயா ஆகியோா் வேட்பாளா்களாக மனு தாக்கல் செய்திருந்தனா். இதில், பாஜக வேட்பாளரின் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், திமுக, அதிமுக நேரடி போட்டியாக இருக்கும் என எதிா்பாா்க்கப்பபட்டது.

ஆனால், அதிமுக வேட்பாளா் தேவி தனது வேட்பு மனுவை வாபஸ் பெற்றாா். இதனால், திமுக வேட்பாளா் பத்மாவதி போட்டியின்றி தோ்வாகி உள்ளாா். திமுக வேட்பாளா் பத்மாவதியின் கணவா் சி. லோகன்துரை, கூடலூா் நகர திமுக செயலராகவும், கூடலூா் 1-ஆவது வாா்டில் வேட்பாளராகவும் உள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com