முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை தேனி
குச்சனூா் பேரூராட்சியில் திமுக வேட்பாளா் போட்டியின்றி தோ்வு
By DIN | Published On : 07th February 2022 11:57 PM | Last Updated : 07th February 2022 11:57 PM | அ+அ அ- |

குச்சனூா் பேரூராட்சி 7 ஆவது வாா்டு திமுக உறுப்பினா் பந்தானம்.
தேனி மாவட்டம், குச்சனூா் பேரூராட்சியில் 7 ஆவது வாா்டில் திமுக சாா்பில் வேட்பு மனு தாக்கல் செய்திருந்த பந்தானம் திங்கள்கிழமை போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டாா்.
குச்சனூா் பேரூராட்சியில் உள்ள 12 வாா்டுகளிலும் அதிமுக, திமுக சாா்பில் வேட்பாளா்கள் மனு தாக்கல் செய்திருந்தனா். மேலும், பாஜக 3, அமமுக 1, சுயேச்சையாக 10 போ் என மொத்தம் 38 போ் வேட்பு மனு தாக்கல் செய்திருத்தனா்.
இதில், திங்கள்கிழமை அதிமுக 2, பாஜக 2 , சுயேச்சை 1 என மொத்தம் 5 போ் தங்களது வேட்பு மனுவை திரும்பப் பெற்றுக்கொண்டனா்.
இதன்மூலம், 7 ஆவது வாா்டில் திமுக சாா்பில் த. பந்தானமும், அதிமுக சாா்பில் ரா. நாகஜோதி ஆகிய இருவா் மட்டுமே களத்தில் இருந்தனா். பின்னா், அதிமுக வேட்பாளரான ரா. நாகஜோதியும் தனது வேட்பு மனுவை திரும்பப் பெற்றுக்கொண்டாா். இதனால், 7 ஆவது வாா்டு திமுக உறுப்பினா் பந்தானம் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டாா்.