கம்பம்: தேர்தலை புறக்கணித்து கருப்பு கொடி ஏற்றிய பொதுமக்களுடன் தாசில்தார் பேச்சு

தேனி மாவட்டம் கம்பத்தில் 4ஆவது வார்டு ஐசக் போதகர் தெரு பகுதி மக்கள் தேர்தல் புறக்கணிப்பு பதாகை வைத்து கருப்பு கொடிகளை கட்டியதால் தாசில்தார் பேச்சுவார்த்தை நடத்தினார்.
தேர்தலை புறக்கணித்து கருப்பு கொடி ஏற்றிய பொதுமக்களுடன் தாசில்தார் பேச்சு
தேர்தலை புறக்கணித்து கருப்பு கொடி ஏற்றிய பொதுமக்களுடன் தாசில்தார் பேச்சு

கம்பம்: தேனி மாவட்டம் கம்பத்தில் 4ஆவது வார்டு ஐசக் போதகர் தெரு பகுதி மக்கள் தேர்தல் புறக்கணிப்பு பதாகை வைத்து கருப்பு கொடிகளை கட்டியதால் தாசில்தார் பேச்சுவார்த்தை நடத்தினார்.

தேனி மாவட்டம் கம்பம் நகராட்சியில் உள்ளது 4வது வார்டு ஐசக் போதகர் தெரு, இங்கு சுமார் 50 குடும்பத்தினர் வசிக்கின்றனர்.

கடந்த பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகளான கழிப்பறை, குடிநீர், தெருவிளக்கு, இல்லாததால் தேர்தலை புறக்கணிகிறோம் என்று தெரு நுழைவு வாயிலில் அறிவிப்பு பதாகை வைத்து, வீடுகளில் கருப்பு கொடி ஏற்றினர்.

உத்தமபாளையம்  தாசில்தார் அர்ஜுனன், வருவாய் ஆய்வாளர் பொன்.கூடலிங்கம்,  ஆகியோர் புறக்கணிப்பு பதாகை வைத்த தெரு மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதன் பின்னர் உடனடியாக நகராட்சி உதவி பொறியாளர் சந்தோஷ்குமார்  தெருவிளக்கு பொருத்தவும், குடிநீர் இணைப்பு தருவதற்கும் வேலைகளைத் தொடங்கினார்.

சுகாதார ஆய்வாளர் சுருளியப்பன் சுகாதார பணியாளர்களை கொண்டு துப்புரவு பணிகளை செய்தார். தேர்தல் முடிந்ததும், தார்சாலை அமைக்கப்படும், என்று உறுதி அளித்த தன் பேரில் புறக்கணிப்பை கைவிட்டும், அறிவிப்பு பதாகையை அகற்றினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com