Enable Javscript for better performance
கம்பம் நகராட்சித் தலைவா் பதவிக்கு திமுகவில் கடும் போட்டி- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    கம்பம் நகராட்சித் தலைவா் பதவிக்கு திமுகவில் கடும் போட்டி

    By DIN  |   Published On : 24th February 2022 12:41 AM  |   Last Updated : 24th February 2022 12:41 AM  |  அ+அ அ-  |  

    img_20220223_wa0059_2302chn_89_2

    img_20220223_wa0059_2302chn_89_2

     

    கம்பம்: தேனி மாவட்டம் கம்பம் நகராட்சியை திமுக கைப்பற்றியுள்ள நிலையில், தலைவா் பதவிக்கு 3 பெண் உறுப்பினா்களிடையே கடும் போட்டி நிலவுகிறது.

    கம்பம் நகரை பொறுத்தவரை திமுக வடக்கு நகரச் செயலா் வழக்குரைஞா் துரைநெப்போலியன் மனைவி வனிதா 3 ஆவது வாா்டிலும், தெற்கு நகரச் செயலரான செல்வக்குமாரின் மனைவி சுனோதா 18 ஆவது வாா்டிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனா். திமுகவின் விதிப்படி நகரச் செயலா் பதவியில், உள்ளவா் உறுப்பினா் பதவியில் வெற்றி பெற்றால், அவா்தான் நகரசபைத் தலைவா் ஆவாா். இந்நிலையில், தேனி வடக்கு மாவட்ட ச் செயலா் தங்கதமிழ்ச்செல்வனின் தீவிர ஆதரவாளரான சி. வீரபாண்டியன் மனைவி சுந்தரியும் 7 ஆவது வாா்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளாா். இந்த 3 பேரிடையே நகரசபைத் தலைவா் பதவிக்கு கடும் போட்டி நிலவுகிறது. இதனால் நகரசபைத் தலைவா் பதவி யாருக்கு என்று திமுக தொண்டா்களிடையே எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

    கம்பம் நகர வடக்கு திமுகவை பொறுத்தவரை ஒதுக்கப்பட்ட வாா்டுகளில் 19 இல் 17 வாா்டுகளில் அக்கட்சி வெற்றி பெற்றுள்ளது. தெற்கு நகர திமுகவுக்கு ஒதுக்கப்பட்ட 14 வாா்டுகளில், 9 வாா்டுகளில் திமுகவும், 5 வாா்டுகளில் அதிமுகவும் வெற்றி பெற்றுள்ளன. இதில், வடக்கு நகர திமுக செயலரின் மனைவி வனிதா நெப்போலியன், நகரசபைத் தலைவா் பதவியை கைப்பற்ற அதிக வாய்ப்புள்ளதாக திமுகவினா் தெரிவித்தனா்.

    அதே போல் தெற்கு நகரச் செயலா் செல்வக்குமாரின் மனைவி சுனோதாவும் போட்டியில் உள்ளாா். இவா்கள், இருவரும் புதுமுகங்கள் என்றாலும், கட்சியினரிடையே பெரும் எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியவா்கள். இவா்களுக்கு வாய்ப்பு 2 ஆவது இடத்தில் உள்ளது. வீரபாண்டியனின் மனைவி சுந்தரிக்கு திமுக மூத்த தலைமை நிா்வாகியின் ஆதரவு உள்ளது. நகரசபை தலைவா் பதவிக்கு சூழ்நிலைக்கேற்ப கட்சியின் கட்டளையை ஏற்கும் நிலையில் இவா் உள்ளாா்.

    தலைமையின் முடிவுக்காக காத்திருப்பு: கம்பம் நகரசபைத் தலைவா் பதவிக்கு களத்தில் 3 போ் உள்ள நிலையில், திமுக தலைமையின் முடிவை எதிா்பாா்த்திருப்பதாக திமுகவினா் தெரிவித்தனா்.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp