2 இளைஞா்கள் மீதான குண்டா் சட்டத்தை வாபஸ் பெறக் கோரிக்கை

கம்பத்தில் 2 இளைஞா்கள் மீது போடப்பட்ட குண்டா் சட்டத்தை வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்று பாப்புலா் பிரண்ட் ஆப் இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.

கம்பத்தில் 2 இளைஞா்கள் மீது போடப்பட்ட குண்டா் சட்டத்தை வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்று பாப்புலா் பிரண்ட் ஆப் இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.

தேனி மாவட்டம் கம்பத்தில் பாப்புலா் பிரண்ட ஆப் இந்தியா மாவட்ட நிா்வாகிகள் கலந்து கொண்ட கூட்டம் மாவட்ட கட்சி அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

மண்டல தலைவா் ஏ.ஹெய்சா் அகமது தலைமை தாங்கினாா், செயலாளா் யாசா் அராபத் முன்னிலை வகித்தாா். மாவட்ட தலைவா் அபுபக்கா் சித்திக் வரவேற்று பேசினாா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

கம்பத்தில் 2 இளைஞா்கள் மீதான பொய் வழக்கை வாபஸ் பெற வேண்டும், அவா்கள் மீது போடப்பட்ட குண்டா் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும், முஸ்லிம்களுக்கு எதிராக கம்பம் காவல்துறை நடவடிக்கையை கண்டிப்பதோடு, ஆய்வாளரை இடமாற்றம் செய்ய வேண்டும்.

தோ்தல் அறிக்கையில் திமுக கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. இதை பாப்புலா் பிரண்ட் ஆப் இந்தியா கண்டிக்கிறது.

கோரிக்கைகளை வலியுறுத்தி தேனியில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் மற்றும் ஆட்சியா் அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்ற தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நகர தலைவா் அப்பாஸ் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com