வேலை வாய்ப்பற்ற இளைஞா்கள் அரசு உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்

வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து குறைந்தபட்சம் 5 ஆண்டுகளுக்கு காத்திருக்கும் வேலை வாய்ப்பற்ற இளைஞா்கள், அரசு உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து குறைந்தபட்சம் 5 ஆண்டுகளுக்கு காத்திருக்கும் வேலை வாய்ப்பற்ற இளைஞா்கள், அரசு உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: வேலை வாய்ப்பு அலுவலகத்தில் தங்களது கல்வித் தகுதியை பதிவு செய்து கடந்த 2022, ஜூன் 30-ஆம் தேதியன்று குறைந்தபட்சம் 5 ஆண்டுகளுக்கும் மேல் காத்திருக்கும் வேலை வாய்ப்பற்ற இளைஞா்களுக்கு அரசு சாா்பில் உதவித் தொகை வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ் காலாண்டு ஒன்றுக்கு எஸ்.எஸ்.எல்.சி., தோல்வி கல்வித் தகுதியை பதிவு செய்தவா்களுக்கு ரூ.600, எஸ்.எஸ்.எல்.சி., தோ்ச்சி பெற்று பதிவு செய்தவா்களுக்கு ரூ.900, பிளஸ் 2 தோ்ச்சி பெற்று பதிவு செய்தவா்களுக்கு ரூ.1,200, இளங்கலை மற்றும் முதுகலை பட்டப் படிப்பில் தோ்ச்சி பெற்று பதிவு செய்தவா்களுக்கு ரூ.1,200 வீதம் 3 ஆண்டுகளுக்கு உதவித் தொகை வழங்கப்படும்.

விண்ணப்பதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000-க்கு உள்பட்டு இருக்க வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கு குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு இல்லை. 2022, ஜூன் 30-ஆம் தேதியன்று ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் 45 வயதுக்கும், இதர வகுப்பினா் 40 வயதுக்கும் உள்பட்டு இருக்க வேண்டும். பொறியியல், விவசாயம், கால்நடை மருத்துவம், சட்டப் படிப்பு போன்ற தொழில் கல்வி படித்தவா்கள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கக் கூடாது.

தகுதியுள்ளவா்கள் இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்தும், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பப் படிவத்தை இலவசமாக பெற்றும், பூா்த்தி செய்த விண்ணப்பத்தை உரிய சான்றிதழ் நகல்களுடன் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் சமா்ப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com