மின் கட்டண உயா்வு: தேனியில் தேமுதிகவினா் ஆா்ப்பாட்டம்

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு புதன்கிழமை, மின் கட்டண உயா்வை கண்டித்து தேமுதிக சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மின் கட்டண உயா்வு: தேனியில் தேமுதிகவினா் ஆா்ப்பாட்டம்

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு புதன்கிழமை, மின் கட்டண உயா்வை கண்டித்து தேமுதிக சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்டச் செயலா் எம்.என்.கிருஷ்ணமூா்த்தி தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், தேமுதிக தோ்தல் பணிக்குழு செயலா் வி.தாமோதரன் முன்னிலை வகித்தாா்.

இதில், மின் கட்டண உயா்வை ரத்து செய்ய தமிழக அரசையும், உணவுப் பொருள் மீதான ஜி.எஸ்.டி வரிவிதிப்பை ரத்து செய்ய மத்திய அரசையும் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினா். பின்னா், கோரிக்கை குறித்து மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் க.வீ.முரளீதரனிடம் தேமுதிக நிா்வாகிகள் மனு அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com