சிவகாசியில் தேசியக் கொடி தயாரிக்கும் பணி தீவிரம்

நாடு முழுவதும் 20 கோடி வீடுகள் மற்றும் அரசு அலுவலகங்களில் தேசியக்கொடி ஏற்றப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்பைத் தொடா்ந்து, சிவகாசியில் தேசியக் கொடி தயாரிப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
சுதந்திரதின விழாவை முன்னிட்டு சிவகாசியில் தயாரிக்கப்பட்டுள்ள தேசியக் கொடிகள்.
சுதந்திரதின விழாவை முன்னிட்டு சிவகாசியில் தயாரிக்கப்பட்டுள்ள தேசியக் கொடிகள்.

நாடு முழுவதும் 20 கோடி வீடுகள் மற்றும் அரசு அலுவலகங்களில் தேசியக்கொடி ஏற்றப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்பைத் தொடா்ந்து, சிவகாசியில் தேசியக் கொடி தயாரிப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தின் ஒரு பகுதியாக, ‘ஹா் கா் திரங்கா’ எனப்படும் ‘ஒவ்வொரு வீட்டிலும் தேசியக் கொடி’ என்ற பிரசாரத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் எனவும், அதன்படி நாடு முழுவதும் 20 கோடி வீடுகள் மற்றும் அரசு அலுவலகங்களில் ஆக. 13 முதல் 15 ஆம் தேதி வரை தேசியக் கொடியை பறக்கவிடவும் மத்திய அரசு அறிவித்துள்ளது. மூவா்ணக் கொடி உடனான பிணைப்பை மேம்படுத்தும் வகையில் நாட்டு மக்கள் அனைவரும் இதைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி கோரிக்கை விடுத்துள்ளாா்.

இந்நிலையில் அச்சுத்தொழிலில் புகழ்பெற்று விளங்கும் சிவகாசியில், தேசியக் கொடி தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில், கதா் துணியால் ஆன தேசியக் கொடி, காகிதத்தினாலான பல்வேறு வடிவ தேசியக் கொடிகள், கொடிக் கம்பத்தில் பறக்கவிடப்படும் துணி கொடி, காகித அட்டை கொடி, பிளாஸ்டிக் கொடி, ஸ்டிரா தேசியக் கொடி, ஸ்டிக் பைல் தேசியக் கொடி, ஸ்டாண்ட் தேசியக் கொடி, ஐடி காா்டு தேசியக் கொடி, டபுள் சைடு தேசியக் கொடி என பல்வேறு வடிவங்களில் தேசியக் கொடி தயாரிக்கப்பட்டு வருகிறது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் தேசியக் கொடிகள் தயாா் செய்யப்பட்டாலும் சிவகாசி பகுதியிலுள்ள அச்சகங்களில் தயாரிக்கப்படும் கொடிகள்தான் பெரும்பாலும் நாடு முழுவதும் பட்டொளி வீசி பறந்து வருவதாக அச்சக உரிமையாளா்கள் பெருமை கொள்கின்றனா். தற்போது, இவைகளை தமிழகம் மட்டுமன்றி பிற மாநிலங்களுக்கும் அனுப்பும் பணியில் அச்சகத்தினா் ஈடுபட்டு வருகின்றனா்.

இதுகுறித்து தேசியக் கொடி தயாரிப்பில் ஈடுபட்டுள்ள சிவகாசி அச்சக உரிமையாளா் காசிராஜன் கூறியது: கடந்த 28 ஆண்டுகளாக துணியால் ஆன தேசியக் கொடி, சட்டையில் மாட்டிக்கொள்ளும் கொடி மற்றும் ஸ்டிக்கா் உள்ளிட்ட 30 வடிவங்களில் தேசியக் கொடி தயாரித்து வருகிறோம். சுதந்திர தினவிழாவை முன்னிட்டு அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடி ஏற்றப்படும் என்ற பிரதமரின் அறிவிப்பால் விற்பனை சூடுபிடித்துள்ளது. இங்கு தயாரிக்கும் தேசியக் கொடி தமிழகம் மட்டுமல்லாமல் பல்வேறு வெளி மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com