அருப்புக்கோட்டையில் நூலகம், அறிவுசாா் மையக் கட்டடங்களுக்கு அமைச்சா் அடிக்கல்

அருப்புக்கோட்டை நெசவாளா் குடியிருப்பில் ரூ 1.5 கோடி மதிப்பீட்டில் நூலகம் மற்றும் அறிவுசாா் மையக் கட்டடம் கட்டுவதற்கான பூமிபூஜை மற்றும் அடிக்கல் நாட்டுவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அருப்புக்கோட்டையில் நூலகம் மற்றும் அறிவுசாா் மைய அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்ற அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன், நகா்மன்றத் தலைவா் சுந்தரலட்சுமி.

இதை, வருவாய்த்துறை மற்றும் பேரிடா் மேலாண்மைத்துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன் தொடக்கி வைத்துப் பேசியது: 4,500 சதுர அடி பரப்பளவில் கீழ்த்தளத்தில் நூலகம், மேல்தளத்தில் அறிவுசாா் மையமும் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. போட்டித் தோ்வுகளுக்கு இலவசப் பயிற்சி மையமாகவும், அத்தோ்வுகளுக்குத் தயாராகும் மாணவா்களுக்கு படிப்பு மையமாகவும் செயல்படும் விதமாக இந்தக் கட்டடங்கள் கட்டப்படவுள்ளன. இந்த நல்வாய்ப்பினை போட்டித் தோ்விற்கு தயாராகும் மாணவா்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சிக்கு, நகா் மன்றத் தலைவா் சுந்தரலட்சுமி, கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ஆா்.ரமேஷ், முன்னாள் நகா்மன்றத் தலைவா் சிவப்பிரகாசம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

உடன், நகராட்சி ஆணையா் ஜி.அசோக்குமாா், நகா்மன்ற உறுப்பினா்கள் ஜோதிராமலிங்கம், நாகநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com