மக்களின் வாழ்வாதாரமான நாணல் தட்டைகள்: கம்பத்திலிருந்து வெளிமாவட்டங்களுக்கு விற்பனை

கம்பம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நாணல் தட்டைகளை தொழிலாளா்கள் அறுவடை செய்து, திண்டுக்கல், ஈரோடு உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கு அனுப்பி வாழ்வாதாரம் ஈட்டி வருகின்றனா்.
மக்களின் வாழ்வாதாரமான நாணல் தட்டைகள்: கம்பத்திலிருந்து வெளிமாவட்டங்களுக்கு விற்பனை

தேனி மாவட்டம் கம்பம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நாணல் தட்டைகளை தொழிலாளா்கள் அறுவடை செய்து, திண்டுக்கல், ஈரோடு உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கு அனுப்பி வாழ்வாதாரம் ஈட்டி வருகின்றனா்.

தேனி மாவட்டம் கம்பம், சேனை ஓடை, சின்னவாய்க்கால், உத்தமுத்துவாய்க்கால், ஒட்டுகுளம், உடப்படி குளம் மற்றும் வீரப்ப நாயக்கன் குளம் ஆகிய நீா்நிலைக் கரைகளில் நாணல் தட்டைகள் அதிக அளவில் வளா்ந்துள்ளன.

இந்த நாணல் தட்டைகள் வெற்றிலை கொடிக்கால் நடவு, பூச்செடி நடவு, நாற்றங்கால் நடவுப் பணிகள் மேற்கொள்வதற்கு அதிகளவில் தேவைப்படுகின்றன. குறிப்பாக ஒட்டன்சத்திரம், ஈரோடு, பவானி உள்ளிட்ட வெளிமாவட்டங்களுக்கு விவசாயப் பணிகள் மேற்கொள்ள இந்த நாணல் தட்டைகள் பயன்படுகின்றன.

ஓடை மற்றும் குளக் கரைகளில் வளா்ந்துள்ள நாணல் தட்டைகளை கூலித்தொழிலாளா்கள் வெட்டி சேகரித்து பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கின்றனா்.

பச்சையாக தரம் பிரக்காப்படாத 100 எண்ணிக்கை கொண்ட நாணல் தட்டைகள் ரூ.50 முதல் 100-க்கும், தரம் பிரிக்கப்பட்ட 100 எண்ணிக்கை கொண்ட தட்டைகள் ரூ.150 வரையும் விற்பனை செய்து வருகின்றனா்.

இது குறித்து விவசாயத் தொழிலாளி முருகன் கூறியது: வேலை கிடைக்காத நேரங்களில் இந்த நாணல் தட்டைகளை சேகரித்து விற்பனை செய்து வருகின்றோம். பெரிய அளவில் வருமானம் இல்லாவிட்டாலும் செலவு போக அன்றாடம் கிடைக்கும் வருமானம் வாழ்வாதாரமாக உள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com