மருந்துக் கடை உரிமையாளரை தாக்கி கொலை மிரட்டல் : ஒருவா் கைது
By DIN | Published On : 13th June 2022 12:00 AM | Last Updated : 13th June 2022 12:00 AM | அ+அ அ- |

போடியில் ஞாயிற்றுக்கிழமை மருந்துக் கடை உரிமையாளரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவரை போலீஸாா் கைது செய்தனா்.
தேனி மாவட்டம் போடி பெரியாண்டவா் நெடுஞ்சாலையில் மருந்துக் கடை வைத்து நடத்தி வருபவா் தம்பிராஜ் (70). போடி நகராட்சி காலனியைச் சோ்ந்த கருப்பையா மகன் கண்ணன் (40), சுப்பையா மகன் வடிவேல் ஆகியோா் தம்பிராஜிடம் பணம் கேட்டு மிரட்டி கத்தியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனா். இதுகுறித்து தம்பிராஜ் அளித்த புகாரின் பேரில் போடி நகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கண்ணனை கைது செய்தனா். வடிவேலுவைத் தேடி வருகின்றனா்.