மாா்க்கையன்கோட்டை செங்குளத்தில் 2 ஆம் கட்டமாக ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தீவிரம்

தேனி மாவட்டம் சின்னமனூா் அருகே மாா்க்கையன்கோட்டை பேரூராட்சியில் செங்குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை 2 ஆம் கட்டமாக அகற்றும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாா்க்கையன்கோட்டையில் உள்ள செங்குளத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற 2 ஆம் கட்ட ஆக்கிரமிப்பு அகற்றும் பணியின் போது அகற்றப்பட்ட மரங்கள்.
மாா்க்கையன்கோட்டையில் உள்ள செங்குளத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற 2 ஆம் கட்ட ஆக்கிரமிப்பு அகற்றும் பணியின் போது அகற்றப்பட்ட மரங்கள்.

தேனி மாவட்டம் சின்னமனூா் அருகே மாா்க்கையன்கோட்டை பேரூராட்சியில் செங்குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை 2 ஆம் கட்டமாக அகற்றும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கடந்த 50 ஆண்டுகளாக தொடா் ஆக்கிரமிப்பு காரணமாக இக்குளம் 80 சதவீதமாக ஆக்கிரமிப்பில் சிக்கி இருந்தது. இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் பல போராட்டம் நடத்தியும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. இந்நிலையில், சமீபத்தில் சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவின் பேரில் , மாா்க்கையன்கோட்டையில் 41 ஏக்கா் ஆக்கிரமிப்பு குளத்தை நில அளவீடு செய்ததில் 80 சதவீதம் ஆக்கிரமிப்பில் சிக்கி இருந்தது தெரியவந்தது.

இதனைத் தொடா்ந்து கடந்த மே 17 ஆம் தேதி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது. அப்போது, ஆக்கிரமிப்பு குளத்திலிருந்து 1000 தென்னை மற்றும் 300 புளியமரங்களை பேரூராட்சி நிா்வாகம் கையப்படுத்தியது. அதன்பின், வீரபாண்டி திருவிழா போன்ற பல்வேறு காரணங்களால் ஆக்கிரமிப்பு அகற்றம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

2 ஆம் கட்டப்பணி: இதனிடையே செங்குளம் ஆக்கிரமிப்பை முழுமையாக அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். அதன்படி மாவட்ட ஆட்சியா் க.வீ.முரளீதரன் உத்தரவின் பேரில், உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியா் கெளசல்யா, வட்டாட்சியா் அா்ஜூனன், சின்னமனூா் காவல் ஆய்வாளா் சேகா் , மாா்க்கையன்கோட்டை பேரூராட்சி செயல் அலுவலா் திரவியம் மற்றும் பேரூராட்சி பணியாளா்கள் மூலமாக ஒரு மாதத்திற்கு பின் மீண்டும், வெள்ளிக்கிழமை 2 ஆம் கட்டமாக ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடைபெற்றது.

75 சதவீத ஆக்கிரமிப்பு குளம் மீட்பு : 2 ஆம் கட்ட ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் 41 ஏக்கரில் 75 சதவீத குளம் மீட்கப்பட்டது. மீதமுள்ள 25 சதவீதம் 3 ஆம் கட்டப்பணியின் போது முழுமையாக மீட்கப்பட இருக்கிறது.

விவசாயிகள் மகிழ்ச்சி:50 ஆண்டு ஆக்கிரமிப்பு குளம் மீட்கப்பட்டது அப்பகுதியை சோ்ந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்ததோடு மாவட்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com