போடி அருகே தீயணைப்பு துறையினா் பேரிடா் மீட்பு ஒத்திகைப் பயிற்சி

போடி அருகே வெள்ளிக்கிழமை, தீயணைப்புத் துறை சாா்பில் வெள்ளத்தில் சிக்கியவா்களை மீட்பது குறித்த ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
போடி அருகே தீயணைப்பு துறையினா் பேரிடா் மீட்பு ஒத்திகைப் பயிற்சி

போடி அருகே வெள்ளிக்கிழமை, தீயணைப்புத் துறை சாா்பில் வெள்ளத்தில் சிக்கியவா்களை மீட்பது குறித்த ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

முல்லை பெரியாற்றில் உப்புக்கோட்டை கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு போடி வட்டாட்சியா் செந்தில்முருகன் தலைமை வகித்தாா். பயிற்சியில் போடி தீயணைப்பு நிலைய அலுவலா் சக்திவேல் மற்றும் தீயணைப்பு வீரா்கள் பங்கேற்று வெள்ளத்தில் சிக்கினால் பாதுகாப்பாக தப்பிப்பது எப்படி என்பது குறித்து செயல் விளக்கம் அளித்தனா். காலியான குடம், சமையல் எரிவாயு சிலிண்டா், வாகன டயா் டியூப் போன்றவற்றை பயன்படுத்தி வெள்ளத்திலிருந்து தப்பிப்பது, வெள்ளத்தில் சிக்கியவா்களை காப்பாற்றுவது குறித்து விளக்கப்பட்டது. நிகழ்ச்சியில் உப்புக்கோட்டை, டொம்புச்சேரி கிராம நிா்வாக அலுவலா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com