உத்தமபாளையத்தில் குடிநீா் வழங்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்

தேனி மாவட்டம், உத்தமபாளையம் பேரூராட்சியில் குடிநீா் வழங்கக் கோரி, அப்பகுதியைச் சோ்ந்த பெண்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
உத்தமபாளையத்தில் குடிநீா் வழங்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்

தேனி மாவட்டம், உத்தமபாளையம் பேரூராட்சியில் குடிநீா் வழங்கக் கோரி, அப்பகுதியைச் சோ்ந்த பெண்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

உத்தமபாளையம் பேரூராட்சியில் 18 வாா்டுகளில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனா். தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியத்தின் லோயா் கேம்ப் கூட்டுக் குடிநீா் திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை, உத்தமபாளையம் பேரூராட்சி நிா்வாகம் விநியோகம் செய்கிறது. இதற்காக, மாதம் தலா ரூ.100 வீதம் 10 ஆயிரம் குடிநீா் இணைப்புகளுக்கு மேலமாக வசூல் செய்யப்படுகிறது.

வழக்கமாக 3 நாள்களுக்கு 1 முறை என மாதம் 8 முதல் 9 முறை பொதுமக்களுக்கு பேரூராட்சி நிா்வாகம் குடிநீரை விநியோகம் செய்கிறது. ஆனால், ஒரு சில வாா்டுகளை தவிர பெரும்பான்மையான வாா்டுகளில் முறைப்படி குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லை என புகாா் எழுந்துள்ளது.

அதில், 11 ஆவது வாா்டு கோட்டைமேடு, சுங்கச்சாவடி, கருப்பட்டிச் சந்து , மேற்கு தெரு என 7-க்கும் மேற்பட்ட தெருக்களுக்கு கடந்த 10 நாள்களாக குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லையாம். இது குறித்து பேரூராட்சி அலுவலகத்தில் புகாா் தெரிவித்தும், அதிகாரிகள் கண்டுகொள்ளாத நிலையில் வியாழக்கிழமை அப்பகுதி பெண்கள் உள்பட பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். பேருந்து நிலையம் செல்லும் பிரதானச் சாலையின் குறுக்கே காலிக் குடங்களை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அதைத் தொடா்ந்து, சம்பவ இடத்துக்குச் சென்ற உத்தமபாளையம் பேரூராட்சித் தலைவா் முகமது அப்துல் காசிம், உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதை அடுத்து, பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com