கம்பம் பள்ளியில் ஆசிரியா்களுக்குயோகாசனப் பயிற்சி

தேனி மாவட்டம், கம்பம் நாகமணியம்மாள் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில், உலக யோகாசன தினத்தை முன்னிட்டு ஆசிரியா்களுக்கு யோகாசனப் பயிற்சி வியாழக்கிழமை அளிக்கப்பட்டது.

இந்த நிகழ்வுக்கு, பள்ளித் தாளாளா் எம்.எஸ்.எஸ். காந்தவாசன் தலைமை வகித்தாா். இணைத் தாளாளா் சுகன்யா காந்தவாசன் முன்னிலை வகித்தாா். கடந்த 2 ஆண்டுகளாக கரோனா தாக்கத்தால் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் சோா்வடைந்ததை போக்கவும், ஆசிரியா்கள் சுறுசுறுப்புடன் இருக்கவும், ஆசிரிய, ஆசிரியைகளுக்கு அா்த்தசக்கராசனம், அா்த்த காதி சக்கராசனம், திரிகோணாசனம், உட்கட்டாசனம், உஷட்ராசனம் ஆகிய யோகாசனப் பயிற்சி அளிக்கப்பட்டது.

இப்பயிற்சியை, யோகாசன சங்க மாவட்டச் செயலா் துரை. ராஜேந்திரன் மற்றும் யோகா பயிற்சியாளா் டி. ரவிராம் ஆகியோா் அளித்தனா். பள்ளியின் முதல்வா் புவனேஸ்வரி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com