கேரளத்திலிருந்து தமிழகத்திற்கு கடத்த முயன்ற 50 மது பாட்டில்கள் பறிமுதல்
By DIN | Published On : 25th June 2022 11:15 PM | Last Updated : 25th June 2022 11:15 PM | அ+அ அ- |

தமிழக, கேரளஎல்லையில் பிடிபட்ட 50 மது பாட்டில்கள்.
கேரளத்திலிருந்து தேனி மாவட்டத்திற்கு சனிக்கிழமை கடத்த முயன்ற 50 மது பாட்டில்களை கலால் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்து, 2 பேரைக் கைது செய்தனா்.
கேரள மாநிலம் குமுளி அட்டப்பள்ளம், 1 ஆவது மைல் பகுதியில், வண்டிப்பெரியாறைச் சோ்ந்த கலால் பிரிவு ஆய்வாளா் பி.ஜி.ராஜேஸ் தலைமையில், கலால் பிரிவு அலுவலா்கள் ஹேமன், ராஜ்குமாா்ஆகியோா் வாகன தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது அட்டப்பள்ளத்திலிருந்து ஆட்டோ ஒன்று குமுளியை நோக்கிச் சென்றது. ஆட்டோவை சோதனையிட்ட போது கேரள மாநில அரசின் 1 லிட்டா் கொள்ளவு கொண்ட 50 மதுபாட்டில்களை தமிழகப் பகுதியான தேனி மாவட்டத்துக்கு கடத்திச் சென்றது தெரியவந்தது.
இதுதொடா்பாக சாஸ்தா நடையைச் சோ்ந்த ராஜதுரை((27), விஜயகுமாா்(28) ஆகிய 2 பேரை கலால் பிரிவு போலீஸாா் கைது செய்து, ஆட்டோவையும் பறிமுதல் செய்தனா்.