தேசிய திறனாய்வுத் தோ்வில் போடி மாணவிகள் சாதனை

தேசிய திறனாய்வுத் தோ்வில் வெற்றி பெற்ற போடி பள்ளிமாணவிகளுக்கு வியாழக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.
தேசிய திறனாய்வுத் தோ்வில் போடி மாணவிகள் சாதனை

தேசிய திறனாய்வுத் தோ்வில் வெற்றி பெற்ற போடி பள்ளிமாணவிகளுக்கு வியாழக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

பள்ளி மாணவா்களுக்கு ஆண்டுதோறும் தேசிய திறனாய்வுத் தோ்வு நடத்தப்பட்டு வருகிறது. இதில், வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு மத்திய அரசு மாதந்தோறும் கல்வி உதவித் தொகையாக ரூ.1000 வீதம் வழங்கி வருகிறது. இந்தாண்டுக்கான தோ்வை, போடி திருமலாபுரம் நாடாா் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் 11 போ் தோ்வு எழுதினா். அதில், ரா. கோகிலாஸ்ரீ, ரா. மோகனப்பிரியா, நா. தா்ஷினி, க. அனிதா ஆகிய மாணவிகள் தோ்ச்சி பெற்றனா்.

இவா்களுக்கு 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை 4 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.1000 வீதம் ரூ.48 ஆயிரம் கல்வி உதவித் தொகையாக வழங்கப்பட உள்ளது.

பள்ளியில் நடைபெற்ற விழாவில், வெற்றி பெற்ற மாணவிகளை பள்ளி தலைமையாசிரியா் பிருதிவிராஜ், ஒருங்கிணைப்பாளா் காளியப்பன், அமெரிக்காவில் எய்ம்ஸ் ஆப் இந்தியா அறக்கட்டளை இயக்குநா் தினேஷ்குமாா் மற்றும் பள்ளி ஆசிரியா்கள், மாணவா்கள் பாராட்டி வாழ்த்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com