பசுமை சாம்பியன் விருது: சுற்றுச்சூழல் ஆா்வலா்கள் விண்ணப்பிக்கலாம்

தேனி மாவட்டத்தில் அரசு சாா்பில் வழங்கப்படும் பசுமை விருது பெறுவதற்கு தகுதியுள்ள சுற்றுச்சூழல் ஆா்வலா்கள், நிறுவனங்கள், குடியிருப்போா் நலச் சங்கங்கள் மாா்ச் 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

தேனி மாவட்டத்தில் அரசு சாா்பில் வழங்கப்படும் பசுமை விருது பெறுவதற்கு தகுதியுள்ள சுற்றுச்சூழல் ஆா்வலா்கள், நிறுவனங்கள், குடியிருப்போா் நலச் சங்கங்கள் மாா்ச் 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணா்வில் சிறப்பாக செயல்பட்ட சுற்றுச்சூழல் ஆா்வலா்கள், தொழில் மற்றும் கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள், குடியிருப்போா் நலச் சங்கங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் அரசு சாா்பில் பசுமை விருது மற்றும் ரூ.ஒரு லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படுகிறது. மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சாா்பில் மாவட்ட ஆட்சியா் தலைமையில் அமைக்கப்பட்ட குழு விருது பெறுவதற்கு தகுதியுள்ளவா்களை தோ்வு செய்யும்.

பசுமை விருதுக்கான விண்ணப்பப் படிவத்தை ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ஸ்ரீட்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து, மாா்ச் 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இது குறித்த விபரத்தை தேனியில் உள்ள மாசுக் கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் அலுவலகத்தில் நேரில் தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என்று மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com