கம்பம், கூடலூர் முருகன் கோயில்களில் பங்குனி உத்திரத் திருவிழா

தேனி மாவட்டம் கம்பம், கூடலூர், லோயர்கேம்ப் ஆகிய பகுதிகளில் உள்ள முருகன் கோயில்களில் பங்குனி உத்திர சிறப்பு பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கம்பம், கூடலூர் முருகன் கோயில்களில் பங்குனி உத்திரத் திருவிழா

கம்பம்: தேனி மாவட்டம் கம்பம், கூடலூர், லோயர்கேம்ப் ஆகிய பகுதிகளில் உள்ள முருகன் கோயில்களில் பங்குனி உத்திர சிறப்பு பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தேனி மாவட்டம் லோயர் கேம்பில் உள்ள வழிவிடு முருகன் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா சிறப்பாக நடைபெற்றது.

காலை முதலே ஏராளமான ஆண், பெண் பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடுகளை செய்தனர். அன்னதானம் நடைபெற்றது. கம்பம், கூடலூர் மற்றும் கிராம பகுதிகளில் இருந்து பக்தர்கள் பால்குடம் ஏந்தி, பாதயாத்திரையாக லோயர் கேம்பில் உள்ள வழிவிடு முருகன் கோயிலுக்கு வந்து நேர்த்திக் கடன்களை செலுத்தினர்.

கூடலூரில் உள்ள கூடல் சுந்தர வேலவர் திருக்கோயில் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு காலையிலே கணபதி ஹோமத்துடன் தொடங்கி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. ஆண், பெண் பக்தர்கள் நகரின் முக்கிய வீதிகளில் பால்குடம் ஏந்தி ஊர்வலமாக வந்தனர்.

சுருளி மலையில் உள்ள ஸ்ரீ ஐயப்பன் ஆலயத்தில் பங்குனி உத்திர சிறப்பு பூஜை மற்றும் இருமூர்த்தி திருவிழா நடைபெற்றது.

காலையில் கணபதி ஹோமம், சுப்பிரமண்ய, சாஸ்தா, மிருத்தியுஞ்சய, நவக்கிரக ஹோமங்கள் தொடங்கி ஸ்ரீ ஐயப்ப சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை மற்றும் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

கம்பத்தில் உள்ள சுருளிவேலப்பர், சுப்ரமணியன், சன்முகநாதர் ஆகிய கோயில்களில் பங்குனி உத்திரத் திருவிழா சிறப்பு பூஜை நடைபெற்றது. ஏராளமான ஆண், பெண் பக்தர்கள் கலந்து கொண்டு பிரசாதம் பெற்றுச் சென்றனர். அன்னதானமும் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com