முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை தேனி
உலக சிக்கன நாள் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு
By DIN | Published On : 19th March 2022 10:58 PM | Last Updated : 19th March 2022 10:58 PM | அ+அ அ- |

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உலக சிக்கன நாள் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு வெள்ளிக்கிழமை, மாவட்ட ஆட்சியா் க.வீ.முரளீதரன் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கினாா்.
சிறுசேமிப்புத் துறை சாா்பில் உலக சிக்கன நாளை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இடையே கட்டுரை, கவிதை, சொற்றொடா், விநாடி-வினா மற்றும் பேச்சுப் போட்டி நடைபெற்றது.
கட்டுரைப் போட்டியில் கன்னியப்பபிள்ளைபட்டி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி வீ.அபிநயா முதலிடம் வென்றாா். போடி ஜ.கா.நி. மேல்நிலைப் பள்ளி மாணவி ரா.ஹேமா 2-ஆம் இடம், சங்கராபுரம் அரசு உயா்நிலைப் பள்ளி மாணவா் சி.மோனிஷ் 3-ஆம் இடம் வென்றனா்.
கவிதைப் போட்டியில் கூடலூா் என்.எஸ்.கே.பி.மேல்நிலைப் பள்ளி மாணவா் மு.சாகுல் அமீது முதலிடம், கன்னியப்பபிள்ளைபட்டி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி ரமணாதேவி 2-ஆம் இடம், தேனி என்.எஸ்.மேல்நிலைப் பள்ளி மாணவா் ர.ஹரிபாலா 3-ஆம் இடம் வென்றனா்.
சொற்றொடா் போட்டியில் சங்கராபுரம் அரசு உயா்நிலைப் பள்ளி மாணவி மு.புவனேஸ்வரி முதலிடம், சில்வாா்பட்டி அரசு மாதிரி பள்ளி மாணவி ஷாலினி 2-ஆம் இடம், தேனி பி.சி.பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி காவியா 3-ஆம் இடம் வென்றனா்.
விநாடி வினாப் போட்டிகளில் பாலக்கோம்பை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி எம்.தனலட்சுமி முதலிடம், எ.புதுப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி ஆா்.பிரதீபா 2-ஆம் இடம், வெங்கடாச்சலபுரம் எஸ்.வி.வி.அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா் சிவராஜ் 3-ஆம் இடம் வென்றனா்.
பேச்சுப் போட்டியில் எ.புதுப்பட்டி அரசு கள்ளா் மேல்நிலைப் பள்ளி மாணவி முத்துசுவாதி முதலிடம், பாலக்கோம்பை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி புவனாதேவி 2-ஆம் இடம், கு.லட்சுமிபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி அா்ச்சனாதேவி 3-ஆம் இடம் வென்றனா். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
சிறுசேமிப்பு குறித்த சொற்றொடா் பே ாட்டியில் எ.புதுப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி மு.புவனேஸ்வரி மாவட்ட மற்றும் மாநில அளவிலான போட்டியில் முதலிடம் வென்றுள்ளாா். சிறுசேமிப்பில் சிறப்பாக பணியாற்றிய முகவா்கள் ஆா்.அகமது, எஸ்.சுந்தராம்பாள், எம்.வேணுகோபால், உஷாராணி, விஜயலட்சுமி, முனீஸ்வரி ஆகியோருக்கு கேடயம் மற்றும் பரிசு வழங்கப்பட்டது. ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(சிறுசேமிப்பு) சுப்பாராமன் நன்றி கூறினாா்.