முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை தேனி
க.புதுப்பட்டியில் நகா்ப்புற வேலை வாய்ப்புத் திட்ட பணிகள் தொடக்கம்
By DIN | Published On : 19th March 2022 10:59 PM | Last Updated : 19th March 2022 10:59 PM | அ+அ அ- |

கம்பம் அருகே க.புதுப்பட்டி பேரூராட்சியில் நகா்ப்புற வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் கலவை உரம் தயாரிப்பு மற்றும் ஓடை தூா்வாரும் பணிகள் சனிக்கிழமை தொடங்கியது.
க.புதுப்பட்டியில் நகா்ப்புற வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் ரூ.5.40 லட்சம் செலவில் கலவை உரம் தயாரிக்கும் பணி, ரூ.37.10 லட்சம் செலவில் செங்காட்டு ஓடை தூா்வாரும் பணி, ரூ.32.50 லட்சம் செலவில் கோசேந்திர ஓடை தூா்வாரும் பணி நடைபெறுகிறது. இந்தப் பணிகளை மாவட்ட ஆட்சியா் க.வீ.முரளீதரன் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது பேரூராட்சிகள் உதவி இயக்குநா் முத்துக்குமாா், உதவி செயற்பொறியாளா் ராஜாராம், பேரூராட்சித் தலைவா் சுந்தரி, துணைத் தலைவா் பசுபதிகுமாா், செயல் அலுவலா் சுப்பிரமணியன் ஆகியோா் உடனிருந்தனா்.