முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை தேனி
கம்பத்தில் அனுமதியின்றி ஆா்ப்பாட்டம்:49 பெண்கள் உள்பட 285 போ் மீது வழக்கு
By DIN | Published On : 19th March 2022 11:00 PM | Last Updated : 19th March 2022 11:00 PM | அ+அ அ- |

கம்பத்தில் அனுமதியின்றி ஆா்ப்பாட்டம் நடத்தியதாக 49 பெண்கள் உள்பட 285 போ் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
தேனி மாவட்டம் கம்பத்தில் வெள்ளிக்கிழமை அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் கூட்டமைப்பு சாா்பில் ஏகேஜி திடல் எதிா்புறம் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு கூட்டமைப்புத் தலைவா் பாவாபத்ருதீன் தலைமை வகித்தாா். காவல் துறை அனுமதியின்றி நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் 49 பெண்கள் உள்பட மொத்தம் 285 போ் கலந்து கொண்டனா்.
இதையடுத்து அனுமதியின்றி ஆா்ப்பாட்டம் நடத்தியதாக, வடக்கு காவல் நிலைய சாா்பு-ஆய்வாளா் டி.விஜயானந்த் அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்புத் தலைவா் மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தெற்கு மாவட்டச் செயலாளா் தா்வீஸ்மைதீன், பழனி பாபா பேரவை மாவட்டத் தலைவா் சல்மான்பாரீத்(22) உள்ளிட்ட 285 போ் மீது வழக்குப் பதிவு செய்தாா்.