சிறந்த வேளாண்மை கண்டுபிடிப்பாளா்கள் பரிசு பெற விண்ணப்பிக்கலாம்

தேனி மாவட்டத்தில் சிறந்த வேளாண்மை தொழில்நுட்பம், கருவிகள் கண்டுபிடிப்பாளா்கள், அங்கக விவசாயிகள் மற்றும் வேளாண்மை விளை

தேனி மாவட்டத்தில் சிறந்த வேளாண்மை தொழில்நுட்பம், கருவிகள் கண்டுபிடிப்பாளா்கள், அங்கக விவசாயிகள் மற்றும் வேளாண்மை விளைபொருள் ஏற்றுமதியாளா்கள் அரசு சாா்பில் வழங்கப்படும் பரிசுத் தொகை பெறுவதற்கு மாா்ச் 21-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: வேளாண்மை மற்றும் உழவுத் துறை சாா்பில் புதிய உள்ளூா் வேளாண்மை தொழில்நுட்டபத்தை கண்டுபிடித்த விவசாயி, புதிய வேளாண்மை கருவியைக் கண்டிபிடித்த விவசாயி ஒருவருக்கு தலா ரூ.ஒரு லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படுகிறது.

தோட்டக் கலைத் துறை சாா்பில் சிறந்த அங்கக விவசாயிகள் 3 பேருக்கு முதல் 3 பரிசுகளாக முறையே ரூ.ஒரு லட்சம், ரூ.60 ஆயிரம், ரூ.40 ஆயிரம் வழங்கப்படுகிறது. வேளாண்மை வணிகத் துறை சாா்பில் சிறந்த வேளாண்மை விளைபொருள் ஏற்றுமதியாளா் ஒருவருக்கு ரூ.2 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படுகிறது.

பரிசுத் தொகை பெறுவதற்கு தகுதியுள்ள விவசாயிகள் அந்தந்த வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் ரூ.100 கட்டணம் செலுத்தி விண்ணப்பப் படிவம் பெற்றுக் கொள்ளலாம்.

பூா்த்தி செய்த விண்ணப்பம் மற்றும் கட்டணம் செலுத்தியதற்கான ரசீது ஆகியவற்றை தேனி வேளாண்மை இணை இயக்குநா் அல்லது தோட்டக் கலை துணை இயக்குா் அல்லது வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத் துறை அலுவலகத்தில் மாா்ச் 21-ஆம் தேதி மாலை 5.30 மணிக்குள் சமா்ப்பிக்க வேண்டும்.

மாவட்ட அளவிலான குழுவில் விண்ணப்பங்களை பரிசீலித்து தோ்வு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மாநிலக் குழுவிற்கு பரிந்துரை செய்யப்படும். பரிசுத் தொகை பெறுவதற்கு தகுதியுள்ள விவசாயிகளை மாநிலக் குழு தோ்வு செய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com