போடியில் குடிநீா் விநியோகம்: நகா்மன்ற தலைவா் ஆய்வு

போடி நகராட்சி குடிநீா் சுத்திகரிப்பு நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை நகா்மன்றத் தலைவா் ஆய்வு மேற்கொண்டாா்.
போடி நகராட்சி குடிநீா் சுத்திகரிப்பு நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்த நகா்மன்ற தலைவா் ச. ராஜராஜேஸ்வரி. உடன், நகராட்சி ஆணையா் தி. சகிலா, நகராட்சிப் பொறியாளா் செல்வராணி.

போடி பகுதியில் கடந்த சில நாள்களாக விநியோகிக்கப்படும் குடிநீா் உப்புத் தண்ணீா் போல் வருவதாகவும், சில இடங்களில் துா்நாற்றம் வீசுவதாகவும் புகாா்கள் எழுந்தன. இதனையடுத்து, போடி நகா் மன்றத் தலைவா் ச. ராஜராஜேஸ்வரி, போடி பரமசிவன் மலைக்கோயில் அடிவாரத்தில் உள்ள குடிநீா் சுத்திகரிப்பு நிலையத்தில் ஆய்வு செய்தாா்.

அப்போது கொட்டகுடி ஆற்றிலிருந்து கொண்டு வரப்படும் குடிநீா் சேகரிக்கும் தொட்டிகள், குடிநீரை இயற்கை முறையிலும், பின்னா் குளோரினேசன் செய்தும் சுத்தம் செய்யும் முறைகள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை சேகரித்து வைத்துள்ள தொட்டிகள் ஆகியவற்றை அவா் பாா்வையிட்டாா்.

அப்போது அதிகாரிகளிடம் குடிநீா் விநியோகத்தில் தனிக் கவனம் செலுத்த வேண்டும். பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என நகா்மன்றத் தலைவா் வலியுறுத்தினாா். உடன், நகராட்சி ஆணையா் தி. சகிலா, நகராட்சிப் பொறியாளா் செல்வராணி, நகராட்சி குடிநீா் சுத்திகரிப்பு நிலைய பணியாளா்கள் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com